சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அசத்தும் 'உயிரி செயற்கை' சிறுநீரகம்!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிறுநீரக கோளாறு உள்ளவருக்கு, இயந்திரம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும். இது சிரமமும், செலவும் அதிகமுள்ள முறை.இதை தவிர்க்க, உயிரி-செயற்கை சிறுநீரகம் ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை செய்யும்போது, கூடுதலாக மருந்துகள் கூட நோயாளிக்கு கொடுக்க வேண்டியதில்லை.அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள
அசத்தும் 'உயிரி செயற்கை' சிறுநீரகம்!

சிறுநீரக கோளாறு உள்ளவருக்கு, இயந்திரம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும். இது சிரமமும், செலவும் அதிகமுள்ள முறை.இதை தவிர்க்க, உயிரி-செயற்கை சிறுநீரகம் ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை செய்யும்போது, கூடுதலாக மருந்துகள் கூட நோயாளிக்கு கொடுக்க வேண்டியதில்லை.

அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள உயிரி- செயற்கை சிறுநீரகம், பெயருக்கேற்றாற் போல, பாதி உயிரி முறையிலும், மீதி செயற்கை முறையிலும் இயங்குகிறது. அசுத்த ரத்தத்தை ஒரு குழாய் மூலம் உள்வாங்கி, சுத்திகரித்து, இன்னொரு குழாய் மூலம் வெளியேற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீர் பை மூலம் வெளியேற்றுகிறது.

சோதனைகளின் போது இக் கருவி நன்றாக செயல்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது முதல், ரத்தத்தில் தாது சத்துக்களை சமமாக வைத்திருப்பது வரை அனைத்து பணிகளையும் உயிரி- செயற்கை சிறுநீரகம் சரியாகச் செய்வது தெரியவந்துள்ளது. இக்கருவி மூலம் மேலும் பல மனித பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parthasarathy - Bangalore,இந்தியா
28-செப்-202120:27:33 IST Report Abuse
parthasarathy உயிரி செயற்கை சிறு நீரகம் ஆரிட்டிகல் படித்தேன் எப்பொழுது இந்தியாவிற்கு வரும் ஏதாவது விவரம் இருந்தால் தெரியப்படுத்தவும் என் மனைவி கடந்த பத்துவருடமாக டயாலிசிஸ் செய்து வருகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X