சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இரவில் ஒளிரும் மரங்கள்!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொது இடங்களில், இரவு நேர வெளிச்சத்திற்காக, அதிக அளவில் மின்சாரத்தை செலவிடுகிறது மனித குலம். இந்த மின்னாற்றல் செலவைக் குறைக்க, ஒரு புதிய உத்தியை அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி., தொழில்நுட்ப நிலையம் முன்வைத்து உள்ளது.அதாவது, தாவரங்களை இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிரச் செய்வது. இதை, தாவரங்களின் இயல்பை பாதிக்காத அளவில் செய்ய முடியும் என்பதையும் அவர்கள் காட்டியுள்ளனர். ஏற்கனவே
இரவில் ஒளிரும் மரங்கள்!

பொது இடங்களில், இரவு நேர வெளிச்சத்திற்காக, அதிக அளவில் மின்சாரத்தை செலவிடுகிறது மனித குலம். இந்த மின்னாற்றல் செலவைக் குறைக்க, ஒரு புதிய உத்தியை அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி., தொழில்நுட்ப நிலையம் முன்வைத்து உள்ளது.

அதாவது, தாவரங்களை இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிரச் செய்வது. இதை, தாவரங்களின் இயல்பை பாதிக்காத அளவில் செய்ய முடியும் என்பதையும் அவர்கள் காட்டியுள்ளனர். ஏற்கனவே கடிகாரம் மற்றும் விளையாட்டு பொம்மைகளில் 'பாஸ்பர்' மூலம் வெளிச்சத்தை வாங்கி, இருட்டில் ஒளிரும் தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ளது. எம்.ஐ.டி., விஞ்ஞானிகள், இதையே செடிகளின் இலைகளில் செய்ய முயற்சித்து வெற்றி கண்டுள்ளனர்.

இலைகளின் மீது ஸ்ட்ரோன்டியம் மற்றும் சிலிக்கா கலவையை செலுத்திய பின், அவை சூரிய மற்றும் மின் விளக்குகளின் ஒளியை உள்வாங்கிக்கொண்டன. பின், இருட்டில் வேதி வினை மூலம் இலைகள் ஒரு மணி நேரம் வரை ஒளிர்ந்தன.இந்த ஒளியின் அளவு மனிதர்களின் கண்களுக்குத் தேவையான அளவு பிரகாசமாக இல்லை தான். ஆனால், மேலும் வேதி வினைகளை அதிகரிப்பதன் மூலம் பிரகாசத்தை எட்ட முடியும் என எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் கருதுகின்றன. மின்சாரம் இல்லாமல், மரங்களையும் பாதிக்காமல் இதை சாதிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
24-செப்-202118:14:38 IST Report Abuse
mukundan தண்ட செலவு.... வேற என்ன சொல்ல.... ஒரு டார்ச் போதாதா நைட் ல பாக்க? இல்லைனா சோலார் ஒளி விளக்கு வைக்க வேண்டியது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X