சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்தீயை அணைக்கும் 'டிரோன்'கம்போடியாவின் தேசிய பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், தீ விபத்தை தடுப்பதற்கு உதவும் 'டிரோன்' -ஐ உருவாக்கியுள்ளனர். இதற்காக ரூ. 14.74 லட்சம் செலவிட்டுள்ளனர். இதை பைலட் அமர்ந்து இயக்கலாம். 60 கிலோ வரையிலான எடையை தாங்கும். 10 நிமிடம் இயங்கும். 1 கி.மீ., துாரம் வரை செல்லும். இது 13 அடி உயரம் வரை பறக்கும். வருங்காலத்தில் பறக்கும் உயரம்,

அறிவியல் ஆயிரம்

தீயை அணைக்கும் 'டிரோன்'

கம்போடியாவின் தேசிய பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், தீ விபத்தை தடுப்பதற்கு உதவும் 'டிரோன்' -ஐ உருவாக்கியுள்ளனர். இதற்காக ரூ. 14.74 லட்சம் செலவிட்டுள்ளனர். இதை பைலட் அமர்ந்து இயக்கலாம். 60 கிலோ வரையிலான எடையை தாங்கும். 10 நிமிடம் இயங்கும். 1 கி.மீ., துாரம் வரை செல்லும். இது 13 அடி உயரம் வரை பறக்கும். வருங்காலத்தில் பறக்கும் உயரம், தாங்கும் எடை, பறக்கும் நேரம் மற்றும் துாரம் என அனைத்தும் அதிகரிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் மாடிகளில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர் களுக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

முதல் பெண் அதிபர்

உலகளவில் முதல் பெண் அதிபராக பதவியேற்றவர் இசபெல் பெரன். இவர் அர்ஜென்டினாவின் அதிபராக 1974 ஜூலை 1 முதல் 1976 மார்ச் 24 வரை பதவி வகித்தார். இவரது கணவர் ஜான் பெரன் அந்நாட்டு அதிபராக இருக்கும் போதே 1974 ஜூலை 1ல் மரணம் அடைந்தார். துணை அதிபராக இருந்த இவர் அதிபரானார். அர்ஜென்டினாவின் வயதான முன்னாள் அதிபராக இருக்கிறார். இது தவிர தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் அதிபர் விக்திஸ் பின்போகஸ்திர். இவர் ஐஸ்லாந்தின் அதிபராக 1980 முதல் 1996 வரை 16 ஆண்டுகள் பதவி வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X