3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Added : செப் 23, 2021
Share
வேலுார்:ஓட்டுச்சாவடி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை 24 ம் தேதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலுார் மாவட்டத்தில் உள்ள

வேலுார்:ஓட்டுச்சாவடி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை 24 ம் தேதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை 24 ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X