பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்; மனிதாபிமான நெருக்கடியில் அகதிகள்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கர்தோம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த தலைவர் இப்ரஹிம் முகமது தெரிவித்து உள்ளதாவது:சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள 18

கர்தோம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த தலைவர் இப்ரஹிம் முகமது தெரிவித்து உள்ளதாவது:
சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளன. அங்கு அகதிகள் உட்பட 2.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு சூடானில் 4.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆண்டுதோறு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சூடான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 140 பேர் இந்த காலகட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரை மழை, வெள்ளத்தால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.பலர் வீடுகள் இல்லாமல் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு புதிய தங்குமிடத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


'சூடானில் ஏற்கெனவே வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் இன்னும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளனர். முகாம்களில் மலேரியா தொற்று பரவி வருகிறது. 150 அகதிகளுக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டு உள்ளது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
27-செப்-202114:16:11 IST Report Abuse
Yesappa ஏங்க , சூடான் பச்சயா பாவாடைய?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-செப்-202122:10:57 IST Report Abuse
NicoleThomson இயற்கையை விடுத்து செயற்கையாய் உருவான மதத்தை நம்பி கெட்து போனீர்களே மானுடர்கலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X