பாடி பில்டிங்கில் மூன்றாவது முறையாக உலக சாம்பியனாகப் போகிறார் மணிகண்டன்

Updated : செப் 24, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (4)
Advertisement
மிஸ்டர் வேர்ல்டு பட்டத்தை இரண்டு முறை வென்ற சென்னை மணிகண்டன் மூன்றாவது முறையாக பட்டத்தை தட்டி வர அடுத்த மாதம் உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார்.இன்றைக்கு பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள உடற்பயிற்சி கூடங்களை நடத்திவரும் இந்த உலக சாம்பியன் ஒரு காலத்தில் முட்டை வாங்கி சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்து இருக்கிறார்.எளிமையான குடும்பத்தில் பிறந்த மணிகண்டன் பள்ளிlatest tamil news


மிஸ்டர் வேர்ல்டு பட்டத்தை இரண்டு முறை வென்ற சென்னை மணிகண்டன் மூன்றாவது முறையாக பட்டத்தை தட்டி வர அடுத்த மாதம் உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார்.
இன்றைக்கு பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள உடற்பயிற்சி கூடங்களை நடத்திவரும் இந்த உலக சாம்பியன் ஒரு காலத்தில் முட்டை வாங்கி சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்து இருக்கிறார்.


latest tamil news


எளிமையான குடும்பத்தில் பிறந்த மணிகண்டன் பள்ளி செல்லும் நாட்களில் மிகவும் குண்டாக இருந்தார்.தனது உடல் பருமனைக் குறைக்க ஜம்மிற்கு சென்றவர் சில மாதங்களில் பலரும் ஆச்சரியப்படத்தக்க முறையில் உடம்பை ‛ஸ்லிம்மாக' கொண்டுவந்தார்.


latest tamil news


இதைப் பார்த்த ஜிம் நிறுவனர் பகுதி நேர பயிற்சியாளராக இருந்து வருபவர்களின் உடல் எடையை குறைக்க ஆலோசனை வழங்கும்படி சொல்லியிருக்கிறார்.
உடற்பயிற்சியில் நாட்டம் அதிகரிக்க கல்லுாரி படிப்பிற்கு டாடா சொல்லிவிட்டு முழு நேரமும் ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டே பயிற்சியும் கொடுத்து வந்தார்.


latest tamil news


ஜிம்மில் வாங்கும் சம்பளமும் வீட்டு செலவிற்கே போதாது என்ற நிலையில் தனது பயிற்சிக்கு தேவையான சரியான சாப்பாடு கூட கிடைக்காமல் சிரமப்பட்டு இருக்கிறார், முட்டை வாங்கி சாப்பிடக்கூட பணம் இல்லாமல் பல நாள் தவித்திருக்கிறார்.


latest tamil news


கூடுதல் வருமானத்திற்காக நட்சத்திர ஒட்டல் ஒன்றின் அறைகளை சுத்தம் செய்பவராக பகுதி நேர பணியில் சேர்ந்தார்.அங்கு அமெரிக்கர் ஒருவரை சந்தித்தார்.அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு ஜிம்மில் உள்ள பயிற்சியை கொடுத்து முழங்கால் வலியை சரிசெய்தார் இதனால் சந்தோஷப்பட்ட அவர் ‛உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டுள்ளார்
சொந்தமாக ஒரு ஜிம் வைக்க வேண்டும் என்றதும் அவரே எண்பது லட்ச ரூபாய் செலவழித்து ஒரு ஜிம்மை சென்னை போரூரில் வைத்துக் கொடுத்தார்.
21 வயதில் எண்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜிம்மிற்கு உரிமையாளரான மணிகண்டன் இரண்டு வருடத்தில் எண்பது லட்ச ரூபாய் கடனை திரும்பக் கொடுத்தார்.
உடனே அந்த அமெரிக்கர் இரண்டு வருடத்தில் உன்னால் எண்பது லட்ச ரூபாய் சம்பாதிக்க முடிகிறது என்றால் அடுத்து இன்னும் ஒரு ஜிம் நவீன வசதிகளுடன் ஆரம்பி என்று சொல்லி அதற்கும் உதவி செய்துள்ளார்.
டோனீஸ் பிட்னெஸ் சென்டர் என்ற பெயரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இரண்டாவது ஜிம்மை துவக்கினார் சென்னையில் உள்ள வசதியான நவீன ஜிம்களில் இந்த ஜிம்மும் ஒன்று.
இதற்கு நடுவே தனது பயிற்சியையும் விடாமல் தொடர்ந்தவர் 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
பின்னர் இவரது முதுகு வலியை குறைக்க செய்யப்பட்ட கடுமையான அறுவை சிகிச்சை காரணமாக முன்பு போல நடமாட முடியுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில் இரண்டு வருடம் கடுமையாக உழைத்து பழையபடி தனது உடலை கட்டுக்கோப்பாக கொண்டு வந்தார்.
கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் நின்று போயிருந்த இந்த சர்வதேச பாடி பில்டிங் போட்டி மீண்டும் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது,
மத்திய விளயைாட்டு துறை அங்கீகாரத்துடன் இந்த போட்டிக்கு இந்தியாவில் இருந்து கலந்து கொள்ள செல்வதற்கு உள்ளவர்கள் பட்டியலில் மணிகண்டனும் ஒருவர்.
இவர் தற்போது ‛தாத்ரி' என்ற ப்ளட் ஸ்டெம் செல் தானம் தரும் அமைப்பின் துாதராகவும் செயல்பட்டு வருகிறார். தனது ஜிம் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தன்னைப் போல பாடிபில்டிங்கில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க செலவழித்து வருகிறார்.
பாடி பில்டிங் எனப்படும் உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளே, இதில் கலந்து கொள்பவர்களும் விளையாட்டு வீரர்களே, கிரிக்கெட் கபடி கால்பந்து போல இதில் கலந்து கொள்பவர்களையும் ஒலிம்பிக் வீரர்களைப் போல மத்திய மாநில அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஒரு பாடி பில்டரை பார்த்தால் விளயைாட்டு வீரரைப் பார்ப்பது போல பாருங்கள் அவர்களை ‛பவுன்சர்களைப்' போல பார்காதீர்கள் என்றவர் உங்கள் பிள்ளை பாடி பில்டராக வர ஆசைப்பட்டால் உடனே சம்மதியுங்கள் சந்தோஷப்படுங்கள் காரணம் தன் உடம்பை விரும்ப ஆரம்பித்துவிட்டால் பின்னர் எந்த கெட்ட பழக்கமும் அண்டாது வாழ்க்கையில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் முழுமையாக பின்பற்றுவர் என்றார்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-செப்-202109:56:18 IST Report Abuse
duruvasar கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற புதிர் போல், ஸ்டாலினை பார்த்து மணிகண்டன் உந்துதல் பெற்றாரா இல்லை மணிகண்டனை பார்த்து ஸ்டாலின் உந்துதல் பெற்றாரா என்பதும் புதிர்தான்.
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
24-செப்-202107:51:26 IST Report Abuse
visu இது எதாவது விளம்பரமா இவரை பார்த்தல் மிஸ்டர் வேர்ல்ட் மாதிரி தெரியவில்லையே இந்த வெயிட் கடேகரியில் கூட
Rate this:
mukundan - chennai,இந்தியா
24-செப்-202117:21:06 IST Report Abuse
mukundanகிளாசிக் பிரிவாக இருக்க வாய்ப்பு உண்டு....
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
24-செப்-202107:36:29 IST Report Abuse
ravikumark All the best Manikantan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X