அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி, நான்கு நாள் பயணமாக, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு 'குவாட்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று உரையாட உள்ளார்.முன்னதாக முன்னதாக அமெரிக்காவின் 5 முன்னணி தொழிலதிபர்களை சந்தித்தார்.அதன் விவரம்: 1) குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து பேசினார்.



latest tamil news


பிரதமர் மோடி, நான்கு நாள் பயணமாக, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு 'குவாட்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று உரையாட உள்ளார்.முன்னதாக முன்னதாக அமெரிக்காவின் 5 முன்னணி தொழிலதிபர்களை சந்தித்தார்.அதன் விவரம்: 1) குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ
2) அடோப் நிர்வாகி ஷாந்தனு நாராயண் .
3) பர்ஸ்ட் சோலார் நிர்வாகி மார்க் விட்மர்.
4) ஜெனரல் ஆட்மோமிக்ஸ் அதிகாரி விவேக் லால்.
5) பிளாக்ஸ்டோனில் தலைமை நிர்வாக அதிகாரி டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித் பேசினார்.


பிரதமர் மோடி உடனான குவால்காம் நிறுவனர் கிறிஸ்டியானோ ஆர் அமோன் இந்தியா மேற்கொண்டு வரும் 5 ஜி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளதாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



பிரதமர் மோடி உடனான குவால்காம் நிறுவனர் கிறிஸ்டியானோ ஆர் அமோன் சந்திப்பின் போது
மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் விவாதித்தனர்.
பின்னர் அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணன் உடனான சந்திப்பின் போது இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும், மோடி சந்தித்து பேச உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru Samy -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202116:03:15 IST Report Abuse
Guru Samy 0 .........
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
23-செப்-202122:19:42 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள் மோடிஜி.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202120:31:31 IST Report Abuse
jayvee வயித்தெரிச்சல் தாங்காமல் , மேட் ன் தமிழ்நாடு ப்ரொஜெக்ட்டை அறிவித்தார் எங்கள் முதல்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X