சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தலை சுத்திடுச்சு!

Added : செப் 23, 2021
Share
Advertisement
தலை சுத்திடுச்சு!'கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதே; இவரா இப்படி...' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவைப் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள். இவர், முன்னாள் மத்திய அமைச்சர். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வர்த்தக துறையின் கேபினெட் அமைச்சராக இருந்தார். தற்போது ராஜ்யசபா எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ளார். சட்டம் படித்தவர். சில மாதங்களுக்கு முன்

அக்கம் பக்கம்


தலை சுத்திடுச்சு!



'கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதே; இவரா இப்படி...' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவைப் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள். இவர், முன்னாள் மத்திய அமைச்சர். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வர்த்தக துறையின் கேபினெட் அமைச்சராக இருந்தார். தற்போது ராஜ்யசபா எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ளார். சட்டம் படித்தவர்.
சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்தார். சமீப காலமாகவே இவரது குர்தா பாக்கெட்டில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கவர் தென்படுகிறது. அதில் படிகக்கல்லை வைத்திருக்கிறார்.

அவ்வப்போது அதை வெளியில் எடுத்து பார்த்து விட்டு, மீண்டும் பாக்கெட்டில் வைத்து விடுகிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அவரிடமே இது குறித்து கேட்டனர். அதற்கு அவர், 'இந்த படிகக்கல், நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் கொரோனா போன்ற தொற்றுகளை அழித்து விடும் என்கின்றனர். அதனால் தான் இதை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அலைகிறேன்' என்றார். ஆனந்த் சர்மா கூறியதை கேட்டவர்களுக்கு, ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. 'மற்றவர்கள் கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; நீங்கள் இதை நம்புகிறீர்களா...' என கேட்டால், சத்தமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, நடையை கட்டுகிறார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X