சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல!எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர் எம்.செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த


'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல!



எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர் எம்.செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பென்ஷன் விவகாரம் குறித்து சில உண்மைகளை தெளிவாக்க விரும்புகிறேன்...நான், மத்திய அரசு பணியில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 60 வயதில் பணி நிறைவு பெற்று, 10 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்.மாநில அரசு துறையில் எந்த பணியில் இருந்தாலும், டாக்டர் சொல்வது போல லஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால், மத்திய அரசு பணி அப்படிப்பட்டது அல்ல.கேட்டாலும் 1 ரூபாய் கூட லஞ்சம் கிடைக்காத துறைகளும் உண்டு. கேட்காமலே, பையில் திணித்து விட்டுப் போகும் துறைகளும் உண்டு.நான், லஞ்சம் வாங்கியதே கிடையாது. இந்நாட்டில் எனக்கென சொந்தமாக வீடோ, 1 அடி நிலமோ கிடையாது. இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.நான் பணி நிறைவு பெறும் போது, என் கடைசி மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் தான். டாக்டர் குறிப்பிட்டிருப்பது போல, லட்ச ரூபாய் அல்ல.
கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்கப்படும். அதாவது, 15 ஆயிரம் ரூபாய். அதில் மூன்றில் ஒரு பங்கு, 5,000 ரூபாயை, 'கம்யூட்டேஷன்' செய்ததில் மீதி 10 ஆயிரம் ரூபாய் தான் நிகர பென்ஷன்.அகவிலைப்படி உள்ளிட்ட சமாச்சாரங்களால், தற்போது என் மாதாந்திர பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாய்.எங்கள் மகன் தனிக்குடித்தனம் சென்றதால் நானும், என் மனைவியும் பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாயில் தான், வாடகை கொடுத்து, சாப்பாட்டு, மருத்துவ செலவை பார்த்து கொள்கிறோம்.அந்த வாசகரின் கருத்துப்படி, பென்ஷன் இல்லையென்றால் நானும், என் மனைவியும் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும்.அரசு ஊழியர்களில் நேர்மையாக பணியாற்றியோரும் இருப்பர். அவர்களையும் மனதில் கொள்ள வேண்டும்.ஓய்வூதியம் தேவை தானா என்ற கேள்வி, தமிழக அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்; சேவைத் துறையில் பணியாற்றி பென்ஷனில் உயிர் வாழும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு பொருந்தாது.பென்ஷன் என்பது பிச்சை அல்ல. ஆண்டுக்கணக்காக அரசு பணியில் இருந்து, பணி நிறைவு பெற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும் மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!


இழப்பீடு விரைவில் கிடைக்கட்டும்!



ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாலை விபத்தில் படுகாயம் அடைந்தோர் மற்றும் இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு, நிவாரண உதவிகளை பெற பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தும் நிலை உள்ளது.இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மன உளைச்சல், பண விரயம், கால விரயம் ஏற்படுகிறது.இதை சரி செய்யும் விதமாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்.இதன்படி, சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 15 நாட்களுக்குள் 5 லட்சம் ரூபாயும்; படுகாயம் அடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.
காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்து நீதிமன்றத்தை நாடினால் பாதிக்கப்பட்டவருக்கு, மாநில அரசு சட்ட உதவிகளை செய்யும்.தமிழகத்திலும் இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 1993 மே 18ம் தேதி சென்னையைச் சேர்ந்த, லாரி டிரைவரான லோகேஸ்வரன், அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு, 24 ஆண்டுகள் ஆகியும் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இதற்கான தீர்ப்பு வழங்கியபோது, இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வைக்கப்பட்டதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு
கோரினார்.தமிழகத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு கிடைப்பதில்லை என்பதற்கு மேற்கண்ட வழக்கு, ஒரு சோற்று பதம் போன்றது.பீஹார் போன்று தமிழகத்திலும் விபத்து இழப்பீடு விரைவாக கிடைக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நோய்க்கு சிகிச்சை அளிப்பாரா?



ச.கந்தசாமி, சிந்தலக்கரை, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் 'பேனர்' வைக்க கூடாது. இதை மீறும் தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன்' என, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது கண்டிப்பு காட்டிய ஸ்டாலின், முதல்வரானதும் அதில் அக்கறை காட்டவில்லை போலும்.விழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்காக, சாலையோரம் கட்சி கொடி கட்ட முயன்ற போது, உயர் அழுத்த மின் கம்பியில் உரசி, 12 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.
இந்நிலையில், 'உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக, தி.மு.க.,வினருக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.முதல்வர் ஸ்டாலினின் அறிக்கையில் இருக்கும் கண்டிப்பை பார்க்கும் போது, நிச்சயம் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறோம்.கட்சியினர் நடத்தும் விழாக்களின் போது போக்குவரத்துக்கு இடையூறாக பேனர், வரிசைக்கட்டி நிற்கும் கார்கள், பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களால் பொதுமக்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாதவை.
சிலை திறப்பு, மாநாடு, ஊர்வலம், நலத்திட்ட துவக்கம், அமைச்சரின் ஆய்வு போன்ற நிகழ்ச்சிகளின் போது, சம்பந்தப்பட்ட இடம் களேபரமாக காட்சி அளிக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.மின் செலவு, நிதி விரயம், கால இழப்பு, உற்பத்தி முடக்கம் இன்னும் எண்ணற்ற பிரச்னைகளை அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கின்றன.
இது போன்ற நிகழ்வுகள், 40 ஆண்டுகளாக தமிழகத்தை பீடித்துள்ள நோய்கள் எனலாம். முதல்வர் ஸ்டாலின் அந்நோய்க்கு 'சிகிச்சை' அளிப்பாரா?

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202107:19:04 IST Report Abuse
சமநிலை மூர்த்தி பாவம் கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழை mla-க்களுக்கு பென்சன் கொடுக்கலாம். இவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
R RAVISANKAR - TIRUNELVELI,இந்தியா
24-செப்-202116:54:36 IST Report Abuse
R RAVISANKAR இது போல தனியார் நிறுவனத்தில் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பணியாற்றி பனி நிறைவின் போது அவர் 35000 சம்பளமே பெற்று இருந்தாலும் E.P.F.O. விடம் இருந்து பெரும் பென்ஷன் வெறும் 7500 மட்டும் தான் என்பது தனியார் நிறுவனத்தில் பணிபுரிவர்க்கு மட்டுமே தெரியும். எனவே மத்திய அரசாங்கம் இதை வுயர்த்திடவும் மற்றும் குறைந்த பட்சம் பென்ஷன் 5000 எனவும் செய்து ஓய்வூதிய முதியோரை காத்திட வேண்டும் .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-செப்-202115:47:07 IST Report Abuse
D.Ambujavalli ஐந்து வருஷம், ஆன மட்டும் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் எம் எல் ஏ , எம் பிக்களுக்கு பென்சன், ஆனால் முப்பது, நாற்பது ஆண்டு உழைத்தவர்களுக்கு இறுதி நாட்களில், பெற்ற பிள்ளைகளிடம் மருந்து, மாத்திரை, தேவைகளுக்கு கூட கையேந்தாமல் இருக்கக் கொடுக்கப்படும் ஓய்வொஓதியம்தான் அனாவசியமாக தெரிகிறதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X