சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 23, 2021
Share
Advertisement
'நல்லவேளை உங்கள் தந்தை போல, ஹிந்து மத நுால்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை கரைத்து குடித்து விட்டு, இன்னொரு மதத்திற்கு பல்லக்கு துாக்காமல் இருக்கிறீர்களே... அதற்கு பாராட்டுகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வைகோ பேச்சு:துரை வையாபுரி என்ற என் பெயர் முடிந்து விட்டது; துரை வைகோ தான் இனிமேல் என் பெயர். நான் பெருமாளை வணங்குபவன்.

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நல்லவேளை உங்கள் தந்தை போல, ஹிந்து மத நுால்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை கரைத்து குடித்து விட்டு, இன்னொரு மதத்திற்கு பல்லக்கு துாக்காமல் இருக்கிறீர்களே... அதற்கு பாராட்டுகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வைகோ பேச்சு:துரை வையாபுரி என்ற என் பெயர் முடிந்து விட்டது; துரை வைகோ தான் இனிமேல் என் பெயர். நான் பெருமாளை வணங்குபவன். என்னிடம் பெருமாளும் உண்டு; ஈ.வெ.ரா.,வும் உண்டு.


'இருக்கும் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்தாலே போதும், புதிய முதலீடு ஈர்ப்பது எல்லாம் அரசியல் நடவடிக்கை ஆகி விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் அறிக்கை:
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையில், நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களை, போக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.


'காட்டக் கூடாது என, அந்த, 'டிவி'களுக்கு மேலிட உத்தரவு வந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை:
ஐதராபாத் முஸ்லிம் எம்.பி., ஒவாய்சியின் வீட்டை, 'ஹிந்து சேனா' என்ற அமைப்பினர் அடித்து நொறுக்குவது போல, 'டிவி'களில் காட்டுகின்றனர் இதுபோலத் தான், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் நான் வென்றதும், காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் குண்டர்கள், டில்லியில் என் வீட்டை தாக்கினர். அதை எந்த 'டிவி'களும் காட்டவில்லை.


'சரி, அந்த அறிக்கை தமிழில் இல்லையாமே; தமிழக அரசுக்கு துதி பாடும் உங்களுக்கு அது கஷ்டமாக இல்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: 'நீட்' தேர்வு பற்றிய நீதிஅரசர் ராஜன் கமிட்டி அறிக்கை,
'நீட் தேர்வு வேண்டும்' என்று கேட்கும் மனசாட்சி அற்றவர்களுக்கு மரண அடி கொடுத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, பணக்காரர்களை, நீட் கொழுக்க வைத்ததை நிரூபிக்கும் சான்றாவணம் அது!


'இதில் ஏன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கவலை... தி.மு.க., கொடுத்த பணத்தை வைத்து கொண்டு, அக்கட்சிக்கு துதி பாடிக் கொண்டிருக்க வேண்டியது தானே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
பா.ஜ.,வுடன் கூட்டு வைத்தால் என்ன கதி ஆகும் என்பது புதுச்சேரியிலும் தெரிகிறது. முதல்வர் ரெங்கசாமியை மிரட்டி ராஜ்யசபா எம்.பி., சீட்டை பெற்று விட்டது பா.ஜ.,

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X