பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,745 ஆக சற்று அதிகரித்துள்ளது: 1,624 பேர் நலம்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,682 -ல் இருந்து 1,745 ஆக சற்று அதகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,624 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,60,057 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,745 பேருக்கு கோவிட் உறுதியாகி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,682 -ல் இருந்து 1,745 ஆக சற்று அதகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,624 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,60,057 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,745 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,52,115 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,59,16,422 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 953 பேர் ஆண்கள், 792 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,48,093 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,03,984 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,624 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,99,567 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,427 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக இருந்த நிலையில் இன்று (23ம் தேதி) 222 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-செப்-202109:06:22 IST Report Abuse
duruvasar ஊடகங்களின் செயல்பாட்டின் தொய்வு கண்கூடாக தெரிகிறது. அவர்கள் நினைத்தால் 100 பாதிப்பு கீழ் கொண்டுவரமுடியும். காட்சி ஊடகங்களை பார்த்து சில அச்சு ஊடகங்கள் பாடம் கற்கவேண்டும்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-செப்-202102:40:54 IST Report Abuse
BASKAR TETCHANA நான் தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன் கோரோனோ குறையவில்லை அதிகமாக தான் உள்ளது என்று. இன்றைய நிலைமை என்ன 1600 ஆகா இருந்தது இப்போது 1800 ஆகி விட்டது மா.சு. பொய் சொல்கிறான் என்று . இருபத்திநாலுமணி நேரமும் ஸ்டாலினுடன் இருந்தால் இவன் துறையை யார் கவனிப்பது. தன துறையை கவனிக்க தவறிய இவனுக்கு எல்லாம் மந்திரி பதவி. இந்த லெட்சணத்தில் வருகிற ஊசிகளை விற்று காசு பார்க்கிறான். மத்திய அரசு அனுப்பும் ஊசிகளை தன நண்பர்கள் நடத்தும் மருத்துவ மனைகளுக்கு விற்கிறான். மக்கள் கேட்க வேண்டும். நாளைய கோரோனோ இரண்டாயிரம் ஆகா இருக்கும். விடியல் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X