ராணுவ வீரர் உடல் ஓராண்டுக்கு பின் நல்லடக்கம்: களங்கம் அகன்றதாக தந்தை உருக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர் உடல் ஓராண்டுக்கு பின் நல்லடக்கம்: களங்கம் அகன்றதாக தந்தை உருக்கம்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (16)
Share
ஸ்ரீநகர்: 13 மாதங்களாக தேடப்பட்டு வந்த, பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடும், பாகிஸ்தானுக்கு சென்றிருக்கக் கூடும் என்று களங்கம் கற்பிக்கப்பட்ட ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரின் உடல் குல்காம் பகுதியில் நேற்று (செப்., 22) கண்டுபிடிக்கப்பட்டது. மகன் இறந்த சோகத்தைக் கூட மறைத்து தங்கள் மீதான களங்கம் மறைந்ததாகவும், கடவுளுக்கு நன்றி என்றும் அவரது தந்தை உருக்கமாக

ஸ்ரீநகர்: 13 மாதங்களாக தேடப்பட்டு வந்த, பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடும், பாகிஸ்தானுக்கு சென்றிருக்கக் கூடும் என்று களங்கம் கற்பிக்கப்பட்ட ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரின் உடல் குல்காம் பகுதியில் நேற்று (செப்., 22) கண்டுபிடிக்கப்பட்டது. மகன் இறந்த சோகத்தைக் கூட மறைத்து தங்கள் மீதான களங்கம் மறைந்ததாகவும், கடவுளுக்கு நன்றி என்றும் அவரது தந்தை உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.latest tamil news
ராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளார். மீண்டும் தனது முகாமிற்கு திரும்பிய அவர் சோபியான் மாவட்டத்தில் காணாமல் போனார். அவர் காணாமல் போன அடுத்த நாள் அவர் பயன்படுத்திய வாகனம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு பின் அவரது உடை ரத்தக் கரைகளுடன் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதி ஒருவன் மன்சூரை கொன்றதாக போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாகவும் காவல் துறை தெரிவித்தது. இத்தகவலை அறிந்ததிலிருந்து அவரது தந்தை மன்சூர் அகமது வாகே, தினமும் காலை மண்வெட்டியுடன் புறப்பட்டு பல்வேறு இடங்களில் தோண்டி தனது மகனின் உடல் கிடைக்கிறதா என்று பார்த்துள்ளார். ஓராண்டாக இக்கொடுமையை அனுபவித்த அவருக்கு அவரது மகனின் உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குல்காம் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு உடல் இருப்பதை கிராமத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அது ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரின் உடல் என தெரிந்தது. அவரது தந்தையும் அதனை உறுதிப்படுத்தினார். இன்று மன்சூரின் சொந்த ஊருக்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டது. ராணுவ உயரதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் என நூற்றுக்கணக்கானோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.


latest tamil news
யாருமே நம்பவில்லை!தனது மகன் மறைவு பற்றி அவரது தந்தை வாகே கூறியதாவது: ஷாகிர் காணாமல் போன பிறகு எனக்கும், என் மகனுக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தனர். உடல் மீட்கப்பட்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நான் ஒரு களங்கத்துடன் வாழ்ந்து வந்தேன். நான் காவல்துறையிடம் சென்று என் மகனைப் பற்றி கேட்கும் போதெல்லாம் “தெரியாது... அவன் பாகிஸ்தானில் இருக்கலாம், பயங்கரவாதிகளுடன் சேர்ந்திருக்கலாம்.” என்று பதில் வரும். என் மகனை இழந்தது மிகவும் வேதனை தான், ஆனால் களங்கம் நீங்கியதால் இன்று நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யாருமே என்னை நம்பவில்லை. என கண்ணீர்விட்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X