சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரூ. 13.5 லட்சம் பணம் பறிமுதல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், வெங்கடாஜலம். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவர், தற்போது, தமிழக மாசுக்கட்டுப்பாட்டுவாரிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், இன்று, சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், வெங்கடாஜலம். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவர், தற்போது, தமிழக மாசுக்கட்டுப்பாட்டுவாரிய தலைவராக பணிபுரிந்து வருகிறார்.latest tamil news


இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், இன்று, சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, பண்ணை தோட்டம் மற்றும் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையத்தில் உள்ள வீடு உள்பட ஐந்து இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.


latest tamil news


இதில், ஆத்துார், அம்மம்பாளையத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் நான்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், வெங்கடாஜலம் வீட்டில், இன்று, மதியம், 12:00 மணி முதல், சோதனை நடத்தினர்.இரவு, 8:30 மணியளவில், சோதனையை முடித்துக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்றனர்.

அப்போது இவரது வீட்டில் இருந்து ஆவணங்கள், சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை. இருப்பினும் ரூ. 13.5 லட்சம் ரொக்கப்பணம், ரூ. 2 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
24-செப்-202100:13:47 IST Report Abuse
venkates எல்லா மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீடு மற்றும் உறவினர் வீடும் நேர்மையான அரசு மட்டுமே செய்ய முடியும்,,,
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
23-செப்-202123:57:48 IST Report Abuse
Aarkay முதலில் ஆம்பூர், வாணியம்பாடி தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளை கவனியுங்கள். அதைமட்டும் ive blindness உடன் விட்டுவிடுவார்கள். ஸ்டெர்லைட் காப்பருக்கு கூவிய பெட்டி பாபாக்கள், இதற்கு கூவமாட்டார்களே
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
23-செப்-202123:07:36 IST Report Abuse
srinivasan 25 yrs ago, I knew that every staff gets 5000 day in every rto office of a town . Collected money is sent on hourly basis to some where. No one applies leave in rto office
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X