சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பயம் தேவையில்லை! சொல்கிறார்கள்

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் பல் சொத்தை அகற்றுவது தொடர்பாக கூறும், நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சுபி: சொத்தையான பல்லை அகற்ற வேண்டிய நிலையில், தடுப்பூசி போட்டவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகும் அகற்றலாம். அதனால் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் ஏற்படுமா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது.கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொள்வதற்கும், பல்
சொல்கிறார்கள்

கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் பல் சொத்தை அகற்றுவது தொடர்பாக கூறும், நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சுபி: சொத்தையான பல்லை அகற்ற வேண்டிய நிலையில், தடுப்பூசி போட்டவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகும் அகற்றலாம். அதனால் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் ஏற்படுமா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது.கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொள்வதற்கும், பல் அகற்றும் சிகிச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் என மூன்று விதமான தடுப்பூசிகள் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன.தடுப்பூசியின் முக்கியத்துவத்தை புரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை போடுங்கள். கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம்.அதற்குள் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்ற கணிப்புகள் கிளம்பிஉள்ளன. அதிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சொத்தை பல்லின் தீவிரம் அல்லது வேறு பிரச்னைகளை பொறுத்துதான் பல்லை அகற்ற வேண்டும்.நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால், பல் மருத்துவரிடம் தெரிவித்தால் அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்வர். கொரோனா தடுப்பூசி போட்ட பின் பல்லை எடுத்துக் கொள்ளலாம் அல்லது பல்லை எடுத்த பின் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அது உங்கள் முடிவு.கொரோனா பாதித்தவர் தடுப்பூசி போடுவது மற்றும் ரத்ததானம் செய்வது தொடர்பாக கூறும், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கபூர்: கோவிட் தொற்றுக்கு உள்ளான வர்கள், அதிலிருந்து முழுமையாக குணமானதும் மூன்று மாதங்களுக்கு பின், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

கோவிட் தடுப்பூசி போட்டு, இரண்டு வாரங்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம். இந்த இரண்டு வார அவகாசம், தானம் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்களுக்கான ஒருவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.அதாவது தடுப்பூசி போட்டதன் விளைவால் ஏற்படும் அசவு கரியங்களை, ரத்ததானம் செய்ததன் விளைவாக இருக்குமோ என குழம்பாமல் இருக்கவே இந்த கால அவகாசம்.தடுப்பூசி போட்டவர் ரத்த தானம் செய்வதால் அடுத்தவருக்கு தொற்றை பரப்புவார் என்பதற்கோ, தானம் பெறுபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை வருமோ என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.எனவே, இரு தரப்பினருக்கும் அது பற்றிய பயம் தேவையில்லை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bangaruswamy ("SWAMY") - Mount Druitt, NSW,ஆஸ்திரேலியா
24-செப்-202108:17:31 IST Report Abuse
Bangaruswamy ( இன்றைய கோவில் சொத்துக்களுக்கு வாடகை பற்றிய செய்தி பார்த்தேன். முதலில் ஆக்கிரமிப்பு சரியா அல்லது சரியில்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். பஞ்சாயத்து மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களை ஆக்கிரமித்து இருந்தால் அத்தகைய ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சிவிக் விதிகளின்படி ஊரின் அமைப்பை கட்டிக்காக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X