கல்யாண தரகு சேவையில் களமிறங்கிய பஞ்சாயத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கல்யாண தரகு சேவையில் களமிறங்கிய பஞ்சாயத்து

Added : செப் 23, 2021
Share
கோட்டயம்:கேரளாவின் திடநாடு பஞ்சாயத்து, முதன் முறையாக திருமணத் தரகு சேவையிலும் களமிறங்கிஉள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கோட்டயம் மாவட்டம், திடநாடு கிராமப் பஞ்சாயத்தில் கல்யாணம் ஆகாத ஆண், பெண், விதவையரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, திடநாடு பஞ்சாயத்து இலவச திருமண தரகு சேவையை

கோட்டயம்:கேரளாவின் திடநாடு பஞ்சாயத்து, முதன் முறையாக திருமணத் தரகு சேவையிலும் களமிறங்கிஉள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கோட்டயம் மாவட்டம், திடநாடு கிராமப் பஞ்சாயத்தில் கல்யாணம் ஆகாத ஆண், பெண், விதவையரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, திடநாடு பஞ்சாயத்து இலவச திருமண தரகு சேவையை துவக்கியுள்ளது.

இத்திட்டத்தின் அமைப்பாளரும், திடநாடு பஞ்சாயத்து உறுப்பினருமான ஷெரின் பெருமாக்குன்னல் கூறியதாவது:எங்கள் பகுதியில் வயது அதிகம் ஆகியும் திருமணமாகாத பெண்கள், ஆண்கள் அதிகம் உள்ளனர். விதவையர் அதிகம் உள்ளதும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆண், பெண்ணை திருமண பந்தத்தில் சேர்த்து வைக்கும் தரகுச் சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

இத்திட்டம் துவங்கிய நான்கு நாட்களில் கொல்லம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 2,500 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு ஜோடிக்கு திருமண பேச்சும் துவங்கியுள்ளது. இந்த சேவைக்கு பதிவு செய்ய விரும்புவோருக்கு, சமூக வலைதளங்கள் வழியாக விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அவற்றில் வயது, ஜாதகம், குடும்பம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பிறகே, பதிவு செய்யப்படும்.

இந்த விபரங்கள், பிற பஞ்சாயத்துகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பரஸ்பரம் விருப்பமுள்ள வரன்களுக்கு தகவல்கள் அனுப்பி, மேற்கொண்டு இரு தரப்பினரும் பேசி திருமணம் முடிக்க, இந்த திட்டம் உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X