தேவாலய தலைவர்கள் கூட்டம்: எம்.பி., தகவல்| Dinamalar

தேவாலய தலைவர்கள் கூட்டம்: எம்.பி., தகவல்

Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
திருவனந்தபுரம்:''கேரள பிஷப்பின், 'லவ் ஜிகாத்' கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவின் அனைத்து தேவாலய தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும்,'' என, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.கேரளாவில் முதல்வர் பினாராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு கோட்டயத்தின் குரவிலங்காடு
 தேவாலய தலைவர்கள் கூட்டம்: எம்.பி., தகவல்

திருவனந்தபுரம்:''கேரள பிஷப்பின், 'லவ் ஜிகாத்' கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவின் அனைத்து தேவாலய தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும்,'' என, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.

கேரளாவில் முதல்வர் பினாராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு கோட்டயத்தின் குரவிலங்காடு தேவாலயத்தைச் சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லாரங்கட், பக்தர்கள் மத்தியில் சமீபத்தில் பேசியதாவது:கிறிஸ்துவ பெண்கள் குறி வைத்து காதலிக்கப்படுகின்றனர். பின், மதம் மாற்றி பயங்கரவாத குழுக்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்களுக்கு போதை மருந்து கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த காதல் மற்றும் போதை ஜிகாதில் சிக்காமல் கிறிஸ்துவ பெண்கள் தப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பிஷப்பின் இந்த பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்தார்.

இந்நிலையில் பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:பிஷப் ஜோசப் கல்லாரங்கட் பேச்சு, கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் எந்தவொரு சமூகத்தையும் தவறாக பேசவில்லை. இதில் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சமூகத்தினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மத்திய அரசு வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.

கேரளாவின் அனைத்து தேவாலய தலைவர்களின் இரண்டு நாள் கூட்டம் மற்றும் கருத்தரங்கு நடத்த, கடந்த 2019ல் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. தற்போது நிலவும் பதற்றமான சூழலை அடுத்து, கேரளாவில் அனைத்து தேவாலய தலைவர்களின் கூட்டத்தை விரைவில் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, தேவாலய தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும். எந்தவொரு சமூகத்தினரையும் புண்படுத்த கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X