தமிழகத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை முயற்சி

Added : செப் 23, 2021
Share
Advertisement
திருப்பதி:தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களில் ஒரு பெண் மட்டும் உயிரிழந்தார். தமிழகத்தின் திருவள்ளூரைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி புவனேஸ்வரி. மகள்கள் மோகன பிரியா, துர்கா ஆகியோருடன் வசித்து வருகின்றனர். சமீபத்தில் கருணாகரன், திருத்தணி கோவிலில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் செல்வதாக

திருப்பதி:தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களில் ஒரு பெண் மட்டும் உயிரிழந்தார்.

தமிழகத்தின் திருவள்ளூரைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி புவனேஸ்வரி. மகள்கள் மோகன பிரியா, துர்கா ஆகியோருடன் வசித்து வருகின்றனர். சமீபத்தில் கருணாகரன், திருத்தணி கோவிலில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் செல்வதாக உறவினர்களிடம் கூறிச் சென்றுள்ளார்.இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் கருணாகரனின் தங்கை போன் செய்து விசாரித்து உள்ளார்.

ஊருக்கு வந்து கொண்டு இருப்பதாக கருணாகரன் போனில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். அதன்பின் போன் 'ஸ்விட்ச் ஆப்' ஆகியுள்ளது. இதற்கிடையே, ஆந்திராவின் சித்துார் மாவட்டம், ராமப்பா கோவில் அருகே, விஷம் குடித்த நிலையில் நான்கு பேர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த கருணாகரன் குடும்பத்தினர் என தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருணாகரன், மோகன பிரியா, துர்கா ஆகியோரை மீட்டு, திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரி மட்டும் இறந்து விட்டார். கருணாகரன் ஏற்கனவே லாரி ஓட்டி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அந்த வேலையை விட்டு விட்டதால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், குடும்பத்தினருடன் கருணாகரன் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விஜயாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X