உபயோகித்த முக கவசம்: சர்ச்சையில் அமைச்சர்

Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
குவாலியர்:மத்திய பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தான் அணிந்திருந்த இரண்டு முக கவசங்களில் ஒன்றை கழற்றி, பா.ஜ., நிர்வாகிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், மத்திய விமான
 உபயோகித்த முக கவசம்: சர்ச்சையில் அமைச்சர்

குவாலியர்:மத்திய பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தான் அணிந்திருந்த இரண்டு முக கவசங்களில் ஒன்றை கழற்றி, பா.ஜ., நிர்வாகிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார்.இந்த கூட்டத்திற்கு குவாலியர் தொகுதியின் முன்னாள் எம்.பி., அருண் மிஸ்ரா, முக கவசம் அணியாமல் வந்திருந்தார். இதை கவனித்த மத்திய அமைச்சர் சிந்தியா, தான் அணிந்திருந்த இரண்டு முக கவசங்களில், ஒன்றை கழற்றி அருண் மிஸ்ராவிடம் வழங்கினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 'லட்சக்கணக்கில் செலவு செய்து ஆளும் அரசு, அரசியல் பேரணிகளை நடத்தி வரும் நிலையில், அதன் அமைச்சர்கள், தாங்கள் உபயோகித்த முக கவசங்களை மக்களுக்கு வினியோகித்து வருகின்றனர்' என, காங்., விமர்சித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
27-செப்-202102:31:33 IST Report Abuse
Amal Anandan அது எப்படி பிஜேபியில் முக்கால் வாசி பேர் இப்படி இருக்காங்க?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-செப்-202123:56:14 IST Report Abuse
தமிழவேல் புத்திசாலித்த தனத்தை மெச்சிக்கணும்... இவனுவோளுக்கெல்லாம் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி, செருப்புத் தூக்குறதுக்கு வச்சியிருக்கிற அதிகாரிகள் இவங்கெல்லாம் அவரை தயார் பண்ணலியா ?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-செப்-202101:42:22 IST Report Abuse
Milirvan ///'லட்சக்கணக்கில் செலவு செய்து ஆளும் அரசு, அரசியல் பேரணிகளை நடத்தி வரும் நிலையில், அதன் அமைச்சர்கள், தாங்கள் உபயோகித்த முக கவசங்களை மக்களுக்கு வினியோகித்து வருகின்றனர்'// தங்களை சார்ந்த ஒருவருக்கு தான் அணிந்திருந்ததால் மேல் உள்ள ஒன்றை கொடுத்ததை '''மக்களுக்கு விநியோகம்''' என்று திரிசமன் செய்வதே இவர்களின் டிசைன்.. அணியாமல் வந்தவருக்கு உடனடி தீர்வாக கொடுக்கப்பட்டது ஒன்றும் பெரிய நேஷனல் ஹெரால்டு ஊழல் இல்லை..கான்கிராஸ் காரர்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X