சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 23, 2021
Share
Advertisement
கங்கை நீர் தெளித்ததால் வழக்குசம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். முதல்வர் சென்ற இடங்களை சுத்தம் செய்யும் பணியில் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.பொதுக்கூட்டம் நடந்த இடம், ஹெலிகாப்டர் இறங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளில் கங்கை நீரை தெளித்தனர். இதையடுத்து

கங்கை நீர் தெளித்ததால் வழக்கு

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். முதல்வர் சென்ற இடங்களை சுத்தம் செய்யும் பணியில் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.பொதுக்கூட்டம் நடந்த இடம், ஹெலிகாப்டர் இறங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளில் கங்கை நீரை தெளித்தனர். இதையடுத்து சமாஜ்வாதி இளைஞர் அணித் தலைவர் உட்பட 810 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஷோபியன்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் அனாயத் அஷ்ரப் தார் என்ற பயங்கரவாதி, மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கிடைத்தன.நேற்று முன்தினம் இரவு அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அனாயத் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில் பாக்., எல்லைக்குள் இருந்து ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை கொலை: தாய் கைது

கோர்பா: சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் பெண் ஒருவர், தன் இரண்டரை வயது குழந்தையை தரையில் வேகமாக துாக்கி வீசி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பெண் மன நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தாய்ப்பால் கேட்டு குழந்தை தொடர்ந்து வற்புத்தியதால், ஆத்திரமடைந்த அந்த பெண், குழந்தையை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பஸ் விபத்து: 6 பேர் பலி

ரைகஞ்ச்: மேற்கு வங்கத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்ளை ஏற்றிச் சென்ற பஸ், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தலைமைச் செயலர் மாற்றம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி சமீபத்தில் பதவி ஏற்றார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு நெருக்கமாக இருந்து வந்த மாநில தலைமைச் செயலர் வின்னி மகாஜன், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக, அனிருத் திவாரி நியமிக்கப்பட்டார். மகாஜனின் கணவரான திங்கர் குப்தா, டி.ஐ.ஜி.,யாக உள்ளார். எனவே, அவரும் பதவி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலவச சிகிச்சைக்கு உத்தரவு

ஜபல்பூர்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டு 'யூனியன் கார்பைடு' ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 3,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; மேலும், 5.58 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், அப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க, மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

சிறுமி சித்ரவதை: பெண் கைது

ஆமதாபாத்: குஜராத்தின் பாட்டன் மாவட்டத்தில் லாக்கி மக்வானா, 40, என்ற பெண், ஒரு ஆணுடன் பேசியதை பக்கத்து வீட்டில் வசிக்கும், 11 வயது சிறுமி பார்த்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி யாரிடமாவது சொல்லி இருப்பாரோ என்ற அச்சத்தில், அந்த பெண், சிறுமியை அழைத்துப் பேசி உள்ளார். சிறுமியிடம் இருந்து உண்மையை பெற, சுடும் எண்ணெயில் அவரின் கையை விட்டு சித்ரவதை செய்துள்ளார். புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X