'பெட்ரோல் விலை குறையாதது ஏன்?' அமைச்சர் ஹர்தீப் விளக்கம்!

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோல்கட்டா : ''ஜி.எஸ்.டி.,யின் கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர மாநில அரசுகள் விரும்பவில்லை,'' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் பெட்ரோலிய துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:பெட்ரோல் விலை குறைய வேண்டும் என நானும் நினைக்கிறேன். எனினும் இதன் விலை குறையாமல் இருப்பதற்கான காரணம் என்ன
'பெட்ரோல் விலை  குறையாதது ஏன்?' அமைச்சர் ஹர்தீப் விளக்கம்!

கோல்கட்டா : ''ஜி.எஸ்.டி.,யின் கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர மாநில அரசுகள் விரும்பவில்லை,'' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பெட்ரோலிய துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:பெட்ரோல் விலை குறைய வேண்டும் என நானும் நினைக்கிறேன். எனினும் இதன் விலை குறையாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி, உங்கள் மனதில் எழலாம். ஜி.எஸ்.டி.,யின் கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர மாநில அரசுகள் விரும்பவில்லை.


latest tamil newsஅதன் காரணமாகவே இதன் விலைகள் குறையாமல் உள்ளன.ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியுடன் சேர்த்து 32 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது.ஒரு பீப்பாய், 1,400 ரூபாய் இருந்த நாள் முதல், இன்று வரை, அதே, 32 ரூபாயை தான் நிர்ணயித்துள்ளோம். தற்போது ஒரு பீப்பாயின் விலை, 5,500 ரூபாயாக உள்ளது. அப்படியும் நாங்கள் விலையை உயர்த்தவில்லை.

மேற்கு வங்கத்தில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சி புரியும் திரிணமுல் காங்., அரசு, அதிக வரி வசூலிப்பதால் தான் அதன் விலை அதிகரித்துஉள்ளது.மாநில அரசு ஜூலை முதல் பெட்ரோல் விலையை 3.51 ரூபாய் அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதன் விளைவாகவே பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rathish - chennai,இந்தியா
23-செப்-202123:26:03 IST Report Abuse
rathish ஆட தெரியாதவன் தெரு கோணல் என சொல்வது போல .........
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-செப்-202123:10:56 IST Report Abuse
Ramesh Sargam இந்த மாநில அரசுகள் போடும் மாநில வரிகள் பற்றி மக்களுக்கு தெரிவதில்லை. அது தெரியாமல், அதிக பெட்ரோல், டீசல் விலைக்கு மோடியே காரணம் என்று கூறிக்கொண்டு திரிகின்றனர் மக்கள்.
Rate this:
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
23-செப்-202123:08:26 IST Report Abuse
Venkat we all know that petrol is exported to Srilanka/Nepal from Indian subcontinent. The cost of petrol is 68 and in Nepal its 78. like how they export to other countries union government of Indian subcontinent can sell to Tamil Nadu/any other State for 40 rupee a liter. Tamil Nadu or any other State can sell it after putting taxes.. maximum petrol price wil be 60 or 70 per litre
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X