பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை மக்களே சீரமைக்கலாம் நமக்கு நாமே திட்டத்தில் அரசு அனுமதி

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:நீர் நிலைகளை துார் வாரி சீரமைத்தல், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை உள்ளூர் மக்களே மேற்கொள்ள, 'நகர்ப்புற நமக்கு நாமே' திட்டத்தில், தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும், நகர்ப்புற நமக்கு நாமே திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528

சென்னை:நீர் நிலைகளை துார் வாரி சீரமைத்தல், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை உள்ளூர் மக்களே மேற்கொள்ள, 'நகர்ப்புற நமக்கு நாமே' திட்டத்தில், தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும், நகர்ப்புற நமக்கு நாமே திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

இத்திட்டத்தில் நீர் நிலைகள் சீரமைப்பு, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, நீர் நிலைகள் சீரமைப்பில், மக்களின் பங்கேற்பை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிற திட்டங்களில் மக்கள் பங்களிப்பு, மூன்றில் ஒரு பங்கு இருந்தால் போதும்; நீர் நிலைகள் சீரமைப்பில், மக்கள் பங்களிப்பு 50 சதவீதம் வரை இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், ஒரு குறிப்பிட்ட நீர் நிலையை துார் வாரி சீரமைக்கும் மொத்த செலவையும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்கலாம். இது, மக்கள் பங்களிப்பாக கருதப்படும்.


திட்டங்கள் தேர்வு எப்படி?



*ஒரு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து, அப்பகுதி மக்கள், நலச் சங்கங்கள், குழுக்கள், அமைப்புகள், நிறுவனங்கள் முன்மொழிவு செய்யலாம்

*திட்டத்துக்கான விண்ணப்பத்துடன், அதற்கான பணி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் வழங்க வேண்டும்

*கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், மக்களின் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தின் சாத்தியக்கூறுகள், செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும்

*பொதுமக்கள் தங்கள் பங்களிப்பாக வழங்கிய தொகையை, தனியாக வங்கிக் கணக்கு துவக்கி பராமரிக்க வேண்டும். அத்திட்டத்திற்கான அரசு நிதியையும், உள்ளாட்சி பங்களிப்பு நிதியையும், அதே வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டும்.


பணிகள் பட்டியல்

நீர் நிலைகள் சீரமைப்பு, பூங்கா, விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது, மரம் நடுதல், அரசு பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கான சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். நுாலகம், மழை நீர் வடிகால்கள், நடைபாதைகள் அமைத்தல், பொது கழிப்பறைகள், மயானங்கள் உள்ளிட்ட 11 வகையான பணிகளை இத்திட்டத்தில் செயல்படுத்தலாம்.


இதெல்லாம் கூடாது

*குடியிருப்பு, அரசு அலுவலக கட்டடங்கள் கட்டக்கூடாது

*அசையும் பொருட்கள், பர்னிச்சர்கள் வாங்கக்கூடாது

*அரசு உதவி, சுயநிதி கல்வி நிறுவனங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.


கண்காணிப்பு

நகர்ப்புற நமக்கு நாமே திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பணிகள், அதன் செயலாக்கத்தை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் சிறப்பு குழு செயல்படும். சென்னையில் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் இந்த குழு செயல்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழிகாட்டிய 'தினமலர்' நாளிதழ்

தமிழகத்தில் 2018ல் பருவ மழை பொய்த்ததால், 2019ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என்ற கருத்துடன், நீர் நிலைகளை சீரமைக்க, பொது மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், நம் நாளிதழ் அழைப்பு விடுத்தது. அதையேற்று சென்னையில் துவங்கி, மாநிலம் முழுதும் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் நீர்நிலைகளை சீரமைக்க களமிறங்கினர்.

ஒரு கட்டத்தில், மக்களின் எழுச்சியை பார்த்து, அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்களும் மக்களுடன் கைகோர்த்தன. இதையறிந்த தமிழக அரசு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், நீர்நிலைகளை பராமரிக்க தேவையான நிதியை விடுவிக்க முன்வந்தது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளை, பொதுமக்கள் நேரடியாக சீரமைக்க அரசு அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நகர்ப்புற நமக்கு நாமே திட்டத்திலும், நீர் நிலைகள் சீரமைப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X