பொது செய்தி

தமிழ்நாடு

காவிரிக்காக உயிரிழந்தவருக்கு சினைவு சின்னம் கட்ட கோரிக்கை

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:''காவிரி போராட்டத்தில்உயிர் நீத்த மன்னார்குடி விக்னேஷுக்கு நினைவு சின்னம் கட்ட வேண்டும்,''என்று அவரதுபெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் 2016ல், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, தமிழகத்தில்பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி சார்பில்,சென்னை எழும்பூர்

சென்னை:''காவிரி போராட்டத்தில்உயிர் நீத்த மன்னார்குடி விக்னேஷுக்கு நினைவு சின்னம் கட்ட வேண்டும்,''என்று அவரதுபெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் 2016ல், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, தமிழகத்தில்பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி சார்பில்,சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை கண்டன பேரணி நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலராக இருந்த மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரும் பங்கேற்றார். அவர் திடீரென தீக்குளித்தார். பின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 2016 செப்., 16ல் இறந்தார்.

அவரின் பெற்றோர் பாண்டியன் செண்பகலட்சுமி ஆகியோர் சென்னையில் அளித்த பேட்டி: எங்களின் ஒரே மகன் விக்னேஷ், படிக்கும் போதே தேசிய மாணவர்படையில் சேர்ந்து, பல நல்ல காரியங்களை செய்தவர். டிப்ளமா இன்ஜினியரிங் படித்து விட்டு, சென்னையில் வேலை பார்த்த அவர், சீமான் பேச்சால் கவரப்பட்டு, நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார். அவர் நடத்திய காவிரி போராட்டத்திலும் பங்கேற்று தீக்குளித்தார். அவரின் தியாகத்தை, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்.

அதற்கு விக்னேஷ்இறந்த செப்., 16ம் தேதியை காவிரி எழுச்சி நாளாக அரசு கடைப்பிடிக்க வேண்டும். விக்னேஷுக்கு அரசின் சார்பில் சென்னையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விக்னேஷின் சகோதரி ஜனனி உடன் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X