பொது செய்தி

தமிழ்நாடு

அக்டோபர் 2ல் போராட்டம் பி.எப்., ஓய்வூதியர்கள் முடிவு

Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி, அக்டோபர் 2ல்,கறுப்பு முக கவசம் அணிந்து, காந்தி சிலை முன் போராடப் போவதாக இ.பி.எப்., ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.சென்னை இ.பி.எப்., ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் பாபு ஆகியோர் அளித்த பேட்டி:வருங்கால வைப்பு நிதியான, இ.பி.எப்.,பில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1995ல் அறிமுகமானது. தமிழகத்தில் ஒன்பது லட்சம்

சென்னை:ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி, அக்டோபர் 2ல்,கறுப்பு முக கவசம் அணிந்து, காந்தி சிலை முன் போராடப் போவதாக இ.பி.எப்., ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை இ.பி.எப்., ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் பாபு ஆகியோர் அளித்த பேட்டி:வருங்கால வைப்பு நிதியான, இ.பி.எப்.,பில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1995ல் அறிமுகமானது. தமிழகத்தில் ஒன்பது லட்சம் பேர் உட்பட நாடு முழுதும் 64 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஆனால், 60 முதல் 2,000 ரூபாய் வரை தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. 'ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்; அதுவரை இடைக்கால நிவாரணமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று 2014ல் பார்லிமென்ட் கமிட்டி அறிவித்தது.

அடுத்தடுத்து அரசுகள் மாறினாலும் ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. இதனால், பீடி தொழிலாளர்கள் முதல், அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு கேரளாவில் 1,200 ரூபாய்; புதுச்சேரியில் 2,000 ரூபாய் பங்களிப்பு நிதியாக அம்மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன. அதுபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும்.

எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காந்தி பிறந்த நாளில், தமிழகம் முழுதும் உள்ள காந்தி சிலைகள் முன், கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-செப்-202104:59:20 IST Report Abuse
Bhaskaran எசமான் மோடி ஐயாவும் நிர்மலா அம்மாவும் கனவில் கூட ஓய்வூதியம் தருவதற்கு இஷ்டமில்லாதவர்கள் வயதானவர்கள் ஆயிரம் ரூபாய் வைத்து வாழ்க்கை நடத்தமுடியுமா இத்தனைக்கும் பி.எப் பணம் பிடிச்சிருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X