ராகுல், பிரியங்கா குறித்த விமர்சனத்தை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்யவேண்டும் - காங்., செய்தித்தொடர்பாளர்| Dinamalar

'ராகுல், பிரியங்கா குறித்த விமர்சனத்தை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்யவேண்டும்' - காங்., செய்தித்தொடர்பாளர்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (15)
Share
சண்டிகர்: கடந்த சில நாட்களாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அமரீந்தர் சிங் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனை அடுத்து அமரிந்தேர் சிங் தன்னை காங்கிரஸ் கட்சி அவமதிப்பதாக

சண்டிகர்: கடந்த சில நாட்களாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அமரீந்தர் சிங் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.latest tamil newsஇதனை அடுத்து அமரிந்தேர் சிங் தன்னை காங்கிரஸ் கட்சி அவமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். மோதல் முற்றவே கவர்னர் பன்வாரிலால் புரோகித் இடம் அமரிந்தேர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். முதல்வர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வருகிறார்.

அமரிந்தேர் சிங் தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப கருத்து தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பு தெரித்திருந்தது. மேலும் அவரது காங்கிரஸ் தலைவர்கள் குறித்த கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அமரீந்தர் சிங் விலகுவாரா என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைமை பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், ஒருவர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற விரும்பினால் கட்சியின் தலைமை அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று பொதுப்படையாக தெரிவித்துள்ளார்.


latest tamil newsபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக விமர்சித்து வந்த அமரீந்தர் சிங், சமீபத்தில் பிரியங்கா, ராகுல் ஆகிய இருவரும் அரசியல் அனுபவம் அற்றவர்கள் என்றும் தகாதவர்களால் தவறாக வழிநடத்தப்படுபவர்கள் என்றும் விமர்சித்திருந்தார். நவ்ஜோத் சிங் சித்து அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வர் ஆவதை தடுக்க ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த உள்ளதாக மேலும் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான அமரீந்தர் சிங் கோபத்தில் பல்வேறு விஷயங்களை பற்றி பேசுகிறார். அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் காங்கிரஸ் கட்சி மரியாதை அளிக்கிறது. அவர் கூறிய வார்த்தைகள் குறித்து அவர் மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டும். கோபம், வெறுப்பு, பகைமை உணர்வு, தனிநபர் தாக்குதல் ஆகியவற்றுக்கு அரசியலில் இடமில்லை என்று சுப்ரியா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மாநில முதல்வர் பதவி வகித்தவர் அமரீந்தர் சிங். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேரூன்ற காரணமான முக்கிய அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X