பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் 97,831 பேர் மனுதாக்கல்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஒன்பது மாவட்டங்களில் 97 ஆயிரத்து 831 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனைநடந்தது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், அக்., 6, 9ல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதன் வாயிலாக, 23 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஒன்பது மாவட்டங்களில் 97 ஆயிரத்து 831 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனைநடந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், அக்., 6, 9ல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதன் வாயிலாக, 23 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான மனு தாக்கல் இம்மாதம் 15ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தது.

இதில், 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 ஆயிரத்து 71 பேர்; 2,901 ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 ஆயிரத்து 967 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.மேலும், 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 8,671 பேர்; 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 1,122 பேரும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 97 ஆயிரத்து 831 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. மனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாள். இதைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பிரசாரமும் களைகட்டி வருகிறது. மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 பேர் ஓட்டளிக்க உள்ளனர். வாக்காளர்களை கவரும் முயற்சிகளில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X