பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் குடிநீர் அலுவலகத்தில் புதுப்பிப்பு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில், மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.சென்னை காமராஜர் சாலையில், எழிலகம் வளாகத்தை ஒட்டி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தை ஒட்டி, பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மெரினா கடற்கரைக்கு
 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் குடிநீர் அலுவலகத்தில் புதுப்பிப்பு

சென்னை:பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில், மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

சென்னை காமராஜர் சாலையில், எழிலகம் வளாகத்தை ஒட்டி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தை ஒட்டி, பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள், இந்த அலுவலகம் எதிரே,சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் வாரிய வளாகத்தில் பல்வேறு மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் தொடர்பான, மாதிரி செயல் விளக்கங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அ.தி.மு.க., ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய மழைநீர் சேமிப்பு திட்டம், பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.ஆனால், முந்தைய ஐந்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், குடிநீர் வாரிய வளாகத்தில் இருந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரிகள் சீரழிந்தன. இவற்றை, முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. இந்நிலையில், ஆய்வு கூட்டத்திற்கு வந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இதை கவனித்துள்ளார்.

வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, இவற்றை புதுப்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரி செயல் விளக்கங்கள் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளன; விரைவில் முறைப்படி திறக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X