பொது செய்தி

தமிழ்நாடு

அபாய கட்டத்தை மீறி புழல் ஏரியில் நீர் சேமிப்பு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:அபாய கட்டத்தை மீறி புழல் ஏரியில், நீர்வளத் துறையினர் நீரை சேமித்து வருவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு 3.30 டி.எம்.சி.,யாகும். வடகிழக்கு பருவ மழை காலங்களில் புழல் ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது.பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு
 அபாய கட்டத்தை மீறி  புழல் ஏரியில் நீர் சேமிப்பு

சென்னை:அபாய கட்டத்தை மீறி புழல் ஏரியில், நீர்வளத் துறையினர் நீரை சேமித்து வருவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு 3.30 டி.எம்.சி.,யாகும். வடகிழக்கு பருவ மழை காலங்களில் புழல் ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது.

பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. எனவே, இந்த ஏரிகளில் சேமிக்கும் நீர், கால்வாய்கள் வழியாக புழல் ஏரிக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 254 கன அடி நீர், புழல் ஏரிக்கு கிடைத்து வருகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 185 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது, புழல் ஏரியில் 3.06 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.வட கிழக்கு பருவ மழை காலத்தில், இதுபோன்று 3 டி.எம்.சி., நீர் இருந்தால், ஏரியின் பாதுகாப்பு கருதி, அதில் இருந்து உபரி நீரை திறக்க வேண்டும். தற்போது, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், ஏரிக்கு நீர்வரத்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, உபரி நீரை திறக்க வேண்டிய அபாய கட்டத்தில் புழல் ஏரி உள்ளது. பருவ மழை துவங்காததை காரணம் காட்டி, ஏரியில் இருந்து நீரை வெளியேற்றாமல் நீர்வளத் துறையினர் அமைதி காத்து வருகின்றனர். மழை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், முன்னறிவிப்பின்றி உபரி நீரை திறந்தால், சாமியார் மடம், தண்டல் கழனி, பாபா நகர், வடகரை, திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது.

உபரி நீர் கால்வாயில் துார்வாரும் பணிகளை துவங்காததால், நீரை திறக்கும்போது, ஆகாயத் தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள், விஷப்பூச்சிகள், பாம்புகள், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகும் அபாயமும் உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீர்வளத் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X