சட்டம் - ஒழுங்கு சீரழிவு பன்னீர்செல்வம் வேதனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டம் - ஒழுங்கு சீரழிவு பன்னீர்செல்வம் வேதனை

Added : செப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
சென்னை:'சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதை அடுத்து, பொருளாதார வளர்ச்சி துவங்கி இருக்கிற நேரத்தில், ௧௦ நாட்களாக, ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது, மிகுந்த மனவேதனை
 சட்டம் - ஒழுங்கு சீரழிவு பன்னீர்செல்வம் வேதனை

சென்னை:'சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதை அடுத்து, பொருளாதார வளர்ச்சி துவங்கி இருக்கிற நேரத்தில், ௧௦ நாட்களாக, ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது, மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

வாணியம்பாடியில், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலர் வசீம்அக்ரம், தி.மு.க., முன்னாள் எம்.பி., பேரன், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த காட்டுராஜா மற்றும் அவரது மனைவி காசியம்மாள், நாகப்பட்டினம் மாவட்டம் இருக்கை கிராமத்தை சேர்ந்த முபாரக். கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்த ராஜா என எண்ணற்ற கொலைகள் வரிசையில், நேற்று முன்தினம் திண்டுக்கல் இ.பி., காலனியைச் சேர்ந்த நிர்மலா, பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இது மட்டுமல்லாமல், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டும் பணியில் ஈடுபடும் போலீசாரை, திருப்பி தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும், அமைதியான சூழலை உருவாக்கிடும் வகையில், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கொலை குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர, அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகளை, முதல்வர் வழங்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X