சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பேச்சு பா.ஜ., கண்டனம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:'வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு, தொழில் முன்னேற்றம் என பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும்முயற்சி' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:'தமிழகத்தை உயர்த்துவோம்' என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை; வரவேற்கிறோம். ஆனால், 'மேக் இன் இந்தியா'வுக்கு நிகராக, 'மேட் இன் தமிழ்நாடு' என சொல்லுவது, மாய்மால வார்த்தை

சென்னை:'வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு, தொழில் முன்னேற்றம் என பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும்முயற்சி' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழகத்தை உயர்த்துவோம்' என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை; வரவேற்கிறோம். ஆனால், 'மேக் இன் இந்தியா'வுக்கு நிகராக, 'மேட் இன் தமிழ்நாடு' என சொல்லுவது, மாய்மால வார்த்தை மட்டுமே.ஒரு மாநிலம், நாட்டையே தனக்கு போட்டியாளராககருதுவது பிதற்றல். மத்திய வணிக வரித்துறை ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது, தான் வகிக்கும் பொறுப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் ஏற்புடையது அல்ல.

முக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்டு விட்டன. போராட்டம், ஆர்ப்பாட்டம், லஞ்சம், ஊழல் என கைவரிசை காட்டியதன் விளைவு, பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.பல தொழிற்சாலைகள்,தமிழகத்தில் முதலீடு செய்ய மறுத்து மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு, தொழில் முன்னேற்றம் எனப் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சி.இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X