மும்பையை வீழ்த்தியது கோல்கட்டா: வெங்கடேஷ், திரிபாதி அரைசதம்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வெங்கடேஷ், திரிபாதி அரைசதம் விளாச கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை,கோல்கட்டாஅணிகள் மோதின. மும்பை அணிக்கு ரோகித் திரும்பினார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், 'பீல்டிங்'
IPL 2021, MI vs KKR, Indian Premier League, IPL t20

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வெங்கடேஷ், திரிபாதி அரைசதம் விளாச கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை,கோல்கட்டாஅணிகள் மோதின. மும்பை அணிக்கு ரோகித் திரும்பினார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


குயின்டன் அரைசதம்:


மும்பை அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது.வருண்சக்ரவர்த்தி வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார்ரோகித். பெர்குசன், பிரசித் கிருஷ்ணா பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட குயின்டன், ரசல் வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது நரைன் 'சுழலில்' ரோகித் (33) சிக்கினார்.

சூர்யகுமார் யாதவ் (5)ஏமாற்றினார்.குயின்டன் (55) அரைசதம் கடந்தார்.இஷான் கிஷான் (14),போலார்டு (21),குர்னால் பாண்ட்யா (12)ஆறுதல் தந்தனர்.மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. சவுரப் திவாரி (5), ஆடம் மில்னே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news
வெங்கடேஷ் விளாசல்:


சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. பவுல்ட் வீசிய முதல் ஓவரில் சுப்மன், வெங்கடேஷ் தலா ஒரு சிக்சர் விளாசினர். ஆடம் மில்னே வீசிய 2வது ஓவரில் அசத்திய வெங்கடேஷ், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' சுப்மன் (13) போல்டானார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, பவுல்ட், மில்னே பந்தில் தலா ஒரு பவுண்டரி அடிக்க, 'பவர்பிளே' ஓவரில் கோல்கட்டா அணி 63 ரன் எடுத்தது.


திரிபாதி அசத்தல்:


குர்னால் பாண்ட்யா பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார் வெங்கடேஷ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த திரிபாதி, ராகுல் சகார், குர்னால், பும்ரா பந்தில் தலா ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய வெங்கடேஷ், 25 பந்தில் அரைசதமடித்தார். பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய திரிபாதி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் வெங்கடேஷ் (53) போல்டானார்.

தொடர்ந்து அசத்திய திரிபாதி, ராகுல் சகார் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். கேப்டன் மார்கன் (7) நிலைக்கவில்லை. ரோகித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிதிஷ் ராணா வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி (74 ரன், 3 சிக்சர், 8 பவுண்டரி), ராணா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
English teacher - Kandy,இலங்கை
24-செப்-202109:19:54 IST Report Abuse
English teacher இந்தியர்கள் மட்டும் சினிமா மற்றும் கிரிக்கெட்டால் கறைபடாமல் இருந்திருந்தால், அவர்கள் ஒரு வல்லரசாக இருந்திருப்பார்கள். அக்கறை கொண்ட இலங்கைத் தமிழர்.
Rate this:
Cancel
24-செப்-202106:24:38 IST Report Abuse
Saikumar C Krishna இந்த கிரிக்கெட் விமர்சனம் தமிழில் எழுதுபவரின் பெயர் கொலை சகிக்கலை.
Rate this:
Cancel
24-செப்-202105:06:40 IST Report Abuse
Anantha Mahalingam 0...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X