அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து சிறப்பு குழு

Updated : செப் 25, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : ''தமிழக கோவில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றுக்கு நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றுவது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமையகத்தில், அமைச்சர் சேகர்பாபு
கோவில்கள், 3 மண்டலங்கள் , பிரித்து சிறப்பு குழு

சென்னை : ''தமிழக கோவில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றுக்கு நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றுவது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமையகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஐந்து அறிவிப்புகள்பின், அவர் அளித்த பேட்டி:சட்டசபையில் அறிவித்ததில், ஐந்து அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. முடிகாணிக்கைக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு, பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்குள் 500 கோவில்களில் திருப்பணி செய்யப்படும்.தமிழக கோவில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு நீதிபதி ராஜு, திருச்சி மண்டலத்திற்கு நீதிபதி ரவிசந்திரபாபு, மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள், மத்திய அரசின் உருக்காலையில் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்பட்டு, வைப்பு நிதியாக வைக்கப்படும்.அதிலிருந்து கிடைக்கும் வைப்பு தொகையில், கோவில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னை லயோலா கல்லுாரி இடம் கோவிலுக்கு சொந்தமானது அல்ல.சென்னை அருகே குயின்ஸ்லேண்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதுார் வட்டம், காசிவிஸ்வநாதர் வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமானது. சமுத்திரமேடு கிராமத்தைச் சேர்ந்த உதயகிரி சாமைய ஜமீன்தாரின் மகன் வெங்கையா என்பவர், உயில் சாசன ஆவணம் எழுதி பதிவு செய்து உள்ளார்.


சட்டப் போராட்டம்அதன்பின் பல்வேறு காரணங்களால், சில நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசித்து சட்டப் போராட்டம் நடத்தி, அது கோவில் நிலம் என உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆலோசனை கூட்டத்தில், துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
26-செப்-202123:08:48 IST Report Abuse
s t rajan ராஜன் நீட்டை ஒழித்து விட்டார். இந்த மூவரும் என்ன செய்யப் போகிறார்களோ ? கோயில்களை கடவுள்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-செப்-202115:09:30 IST Report Abuse
Kasimani Baskaran கம்முனிஸ்ட்களை விட மிகக்கேவலமான ஜந்துக்கள் இதுகள். இந்துக்கள் இவன்களிடம் கவனமாக இருக்க வேண்டும். புரதான நகைகளை பழைய நகைகள் என்று உருக்கிவிட்டால் சரித்திரம் அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். தமிழனின் சரித்திரம் தெரியவேண்டும் என்றால் கீழடியில் உள்ள நாலு சட்டி, பானை, உருளை போன்றவற்றை ஆய்வு செய்து கொள்ளட்டும் என்ற கீழ்த்தரமான எண்ணம் போல.
Rate this:
Cancel
24-செப்-202114:47:25 IST Report Abuse
தேச பக்தன் இனி மூன்று முன்னாள் நீதிபதிகளுக்கும் சம்பளம் மற்றும் இனோவா கார், உதவியாளர்கள் அனைத்தும் கோயில் வருமானத்திலிருந்து கொடுக்கப்படும். கோயில்களில் தேவையில்லாத நகை என்று ஒன்று இருக்கிறதா அதனை எதற்கு உருக்க வேண்டும், அதிலும் ஊழல் தான் மிஞ்சும். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகைகளை கணக்கு எடுக்கணும் என்று சொன்னவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X