பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி விழா: கொலு பொம்மை வந்தாச்சு!

Added : செப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:நவராத்திரி கொலு விற்பனைக்காக, பல்வேறு வகை பொம்மைகளும் புதுவரவாக வந்துள்ளன.திருப்பூர் மாநகர பகுதியில், நவராத்திரி கொலு வழிபாடு விசேஷமாக நடத்தப்படும். பாரம்பரியமாக, ஒன்பது நாட்கள் கொலு வைத்து, பெண்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துகின்றனர். நவராத்திரி வழிபாடு துவங்க இருக்கும் நிலையில், கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது.காதிகிராப்ட் மற்றும்
 நவராத்திரி விழா: கொலு பொம்மை வந்தாச்சு!

திருப்பூர்:நவராத்திரி கொலு விற்பனைக்காக, பல்வேறு வகை பொம்மைகளும் புதுவரவாக வந்துள்ளன.திருப்பூர் மாநகர பகுதியில், நவராத்திரி கொலு வழிபாடு விசேஷமாக நடத்தப்படும். பாரம்பரியமாக, ஒன்பது நாட்கள் கொலு வைத்து, பெண்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துகின்றனர். நவராத்திரி வழிபாடு துவங்க இருக்கும் நிலையில், கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது.காதிகிராப்ட் மற்றும் கதர்கடைகளில், கண்ணை கவரும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. மரம், செடி, கொடி, பூச்சியினம், மிருகம், பறவைகள், மனிதர்கள், முனிவர், தெய்வங்கள் என, பல்வேறு வகையான பொம்மைகள் வந்துள்ளன.காந்தியடிகள், காமராஜர் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன், புதுவரவாக, எம்.ஜி.ஆர்., - ஜெ., உருவ கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. அத்துடன், திருமணம், சீர், காதணி விழா உள்ளிட்ட விழா கொலு 'செட்'களுடன், நாட்டாமை பஞ்சாயத்து நடத்தும் கொலு 'செட்'டும் விற்பனைக்கு வந்துள்ளதாக, கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X