கொரோனா இறப்புக்கு இழப்பீடு மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் பாராட்டிஉள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின்

புதுடில்லி:கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் பாராட்டிஉள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் வழங்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''கொரோனாவுக்கு பலியானவர்களின் உயிரை மீட்டு தர முடியாது.''எனினும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்கும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இழப்பீடு வழங்குவது எளிதல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா செய்துள்ளதை மற்ற நாடுகள் செய்யவில்லை. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறோம்.

இழப்பீடு வழங்குவது தொடர்பாக அடுத்த மாதம் 4ம் தேதி சில வழிகாட்டுதல்களை தெரிவிப்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தற்கொலை செய்தோரின் குடும்பத்துக்கும் இழப்பீடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடியாது என, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X