ஜாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமில்லை: மத்திய அரசு

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:'நிர்வாக ரீதியில் மிகவும் கடினமானது, குழப்பானது, சிக்கலானது என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுதும் 2011ல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பொருளாதார ரீதியிலான தகவல்கள்

புதுடில்லி:'நிர்வாக ரீதியில் மிகவும் கடினமானது, குழப்பானது, சிக்கலானது என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் 2011ல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பொருளாதார ரீதியிலான தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டன. ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை.மாநிலத்தில் உள்ள ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த விபரங்களை தரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, மஹாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2011ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விபரங்களில் பல தவறுகள், குழப்பங்கள் உள்ளன. அது முழுமையானதாகவும் இல்லை. அதனால் அந்த தகவல்களை எதற்காகவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ல் நடத்தப்பட வேண்டும். அதற்காக கடந்தாண்டே உரிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் குறித்த தகவல்கள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும்.கடந்த 1951ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து ஜாதி ரீதியிலான தகவல்களை சேகரிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதுவே தற்போதும் தொடர்கிறது.

ஓ.பி.சி., பிரிவினர் குறித்த தகவல்கள் சேகரிப்பது என்பது நிர்வாக ரீதியில் மிகவும் கடினமானது, சிக்கலானது. அதனால் தான் இந்தத் தகவல்களை சேகரிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X