பொது செய்தி

இந்தியா

ஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு முடிவு

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 118 அதி நவீன 'அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி'களை 7,523 கோடி ரூபாய்க்கு வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை தயாரித்துள்ளது. இந்த அதிநவீன பீரங்கியை பயன்படுத்த, ராணுவ அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. சென்னை ஆவடி கன வாகன

புதுடில்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 118 அதி நவீன 'அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி'களை 7,523 கோடி ரூபாய்க்கு வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை தயாரித்துள்ளது. இந்த அதிநவீன பீரங்கியை பயன்படுத்த, ராணுவ அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. சென்னை ஆவடி கன வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்ட இந்த அதிநவீன பீரங்கிகளை, பிரதமர் மோடி பிப்ரவரியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை 7,523 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, ஆவடி தொழிற்சாலைக்கு ராணுவ அமைச்சகம் 'ஆர்டர்' கொடுத்துஉள்ளது. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி, 58.5 டன் எடை உடையது; 10.638 மீட்டர் நீளமும், 9.456 மீட்டர் உயரமும் உடையது. 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பீரங்கி வாகனம், நவீன 120 மி.மீ., துப்பாக்கியுடன் இயங்குவதுடன், எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த பீரங்கி வாகனம் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ., வேகத்திலும், மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ., வேகத்திலும் இயங்கும் திறன் உடையது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X