அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோசடிகளின் கூடாரம் 'நீட்' தேர்வு: ராமதாஸ்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:'நீட் தேர்வு, மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது, மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:நடப்பு கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, 12ம் தேதி, நாடு முழுதும் நடத்தப் பட்ட, 'நீட்' தேர்வில், ஆள்மாறாட்ட மோசடிகள் நடந்துள்ளன.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் பயிற்சி
 மோசடிகளின் கூடாரம் 'நீட்' தேர்வு: ராமதாஸ்

சென்னை:'நீட் தேர்வு, மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது, மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

நடப்பு கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, 12ம் தேதி, நாடு முழுதும் நடத்தப் பட்ட, 'நீட்' தேர்வில், ஆள்மாறாட்ட மோசடிகள் நடந்துள்ளன.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளது. 50 லட்சம் ரூபாய் கொடுத்தால், மாணவர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை,நீட் எழுத வைத்து, புகழ்பெற்ற மருத்துவ கல்லுாரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறி உள்ளனர்.

டில்லியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும், ஐந்து மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்ததாக, அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்காக பல வழிகளில், பல்வேறு நிலைகளில், போலிச் சான்றிதழ், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளன.நீட் தேர்வு மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது, மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X