அரசியல் செய்தி

தமிழ்நாடு

பருவ மழை பணிகள் முதல்வர் இன்று ஆய்வு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை அடுத்த மாதம் துவங்க உள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள, மாநிலம் முழுதும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில், தலைமைச் செயலர் இறையன்பு

சென்னை:வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை அடுத்த மாதம் துவங்க உள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள, மாநிலம் முழுதும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பருவ மழையின் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை செயலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.கடந்த சில தினங்களாக, மாநிலம் முழுதும் மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம் நடந்து வருகிறது.

வடிகால்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன. மழையின் போது தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், தண்ணீர்தேங்கினால், உடனடியாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து துறை செயலர்கள் பங்கேற்கும், ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. அதில், முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் குறித்த விபரங்களை கேட்டறிவதுடன், முக்கியஆலோசனைகளை முதல்வர் வழங்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X