பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு நிலுவை நீர் திறப்பு காவிரி கூட்டத்தில் கோரிக்கை

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 28 டி.எம்.சி., நிலுவை நீரை, இம்மாத இறுதிக்குள் விடுவிக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் தர வேண்டிய நீர் எவ்வளவு என்பதையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை

சென்னை:தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 28 டி.எம்.சி., நிலுவை நீரை, இம்மாத இறுதிக்குள் விடுவிக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் தர வேண்டிய நீர் எவ்வளவு என்பதையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்களை, மத்திய அரசு அமைத்துள்ளது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடப்பு பருவத்தில் 28 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. அந்த நீரை உடனடியாக இம்மாத இறுதிக்குள் வழங்குமாறு, தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 'கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகள் 83 சதவீதம் அளவிற்கே நிரம்பியுள்ளன. 'மழை பெய்தால் முறைப்படி நீரை வழங்குவோம்' என, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நடப்பாண்டில் கர்நாடகா பயன்படுத்திய நீரின் அளவு விபரங்களை வழங்கும் படி, தமிழகம் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X