கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோதமாக கனிம கொள்ளை அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.குறிப்பிட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, கனிம வளத் துறைக்கு

சென்னை:கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.குறிப்பிட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, கனிம வளத் துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை தனிப்பட்ட ஒன்றாக பார்க்கக் கூடாது. தமிழகம் முழுதும் பல இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மலை, பாறைகள் உடைக்கப்பட்டு, பெரிய அளவில் குவாரி செய்யப்படுகிறது.

எனவே, கண்களையும், காதுகளையும் அதிகாரிகள் திறந்து வைக்க வேண்டும்; எங்கெல்லாம் சட்டவிரோதமாக கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறதோ, அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக கனிமங்களை எடுப்பவர்களிடம், இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்; அபராதம் வசூலிக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி எடுக்கின்றனரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

வேண்டுமென்றே சட்டவிரோதமாக கனிமங்களை எடுப்பவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தவில்லை என்றால், இந்த பிரச்னையை தடுக்க முடியாது. சட்ட நடைமுறையை பின்பற்றி, இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X