ஆஸி., பிரதமர் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை நேற்று
PM Modi, Morrison, Modi US trip

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை நேற்று சந்தித்தார்.இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்தனர்.


latest tamil news


இந்த சந்திப்புக்கு பின் 'டுவிட்டரில்' பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் 'இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள் குவாட் மாநாடு பற்றியும் இந்தோ - பசிபிக் பிராந்திய நிலைமை பற்றியும் ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் விவாதித்தனர்' என கூறப்பட்டுள்ளது.

நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில் 'இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்களின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். கொரோனா தட்பவெப்ப மாற்றம் ஆகிய சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது பற்றி இருவரும் தீவிரமாக விவாதித்தனர்' என்றார்.


ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு


latest tamil news



latest tamil news


இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, இருவரும் இருகரம் கூப்பி ஒருவரை ஒருவர் வரவேற்றனர். இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
24-செப்-202110:33:16 IST Report Abuse
M  Ramachandran யிங்கே ஒரு சீனா தாசனுங்க அவர்கள் என்ன பேசியிருக்கிறார்கள் விவரங்களுக்கு ஆட்களை வைத்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் யசமானுக்கு தெரிவித்து பசை ஏதாவது கிடைக்குமா என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X