சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் 'ரெய்டு' 6.5 கிலோ தங்கம் ; சந்தன மர பொருட்கள் பறிமுதல்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (17+ 14)
Share
Advertisement
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்துார்
மாசு கட்டுப்பாட்டு வாரிய  தலைவர் வீடு, 'ரெய்டு' 6.5 கிலோ தங்கம் ; சந்தன மர பொருட்கள் பறிமுதல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 63. இவர், 1983ல் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில், சிபாரிசு காரணமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் சிக்கின. இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


latest tamil news



இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா; சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீடு உள்பட ஐந்து இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம்; 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. வெங்கடாசலத்தின் வீட்டில், 10 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர் வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி இருந்ததால், சட்ட விரோதமாக சந்தன மர கடத்தலில் ஈடுபட்டாரா; சந்தன மர பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
சேலம் அம்மன்பாளையத்தில், வெங்கடாசலத்திற்கு, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்கிய விதம் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி போது, கட்டுக்கட்டாக பணம், நகைகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் குழு -

Advertisement




வாசகர் கருத்து (17+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-செப்-202104:32:16 IST Report Abuse
meenakshisundaram ஆஹா என்னமா வருமானம் வருது ?எல்லா ஜாதி ஆட்களுக்கும் எல்லா வேலைகளையும் கொடுக்கணும்னா உடனேயே எல்லா வித பிரச்சினைகளையும் செய்யுறாங்களே ஒரு மந்திரி சம்பாரிக்கிற அளவுக்கு இந்த வேலை லே சம்பாரிக்க முடியும் ஒரு அதிகாரியால் என்று நினைத்தாலே தமிழனின் தலை சுற்றுதே
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-செப்-202117:06:04 IST Report Abuse
jayvee இதெல்லாம் ஜஸ்ட் ஆறு மாச கலெக்சின்
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
24-செப்-202111:32:45 IST Report Abuse
Vaiyapuri Rajendran பணியில் இருக்கும் போது உயர் பதிவியில் இருக்கும் அலுவலர் நேர்மையானவர் என்றால் மட்டுமே அவருக்கு ஓய்வுக்குப்பின்னர் பதவி வழங்க வேண்டும் என்று அரசு விதி உண்டு பண்ண வேண்டும்..ஊழல் வழக்குகளை MLA/ MP க்கள் மீது உள்ள வழக்குகளை விசாரிக்க விரைவு நீதி மன்றங்கள் உள்ளது போல தனி நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து 60 நாட்களுக்குள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..லஞ்சம் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மீது உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டுமே பதவியில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வாய்ப்பு உண்டாகும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X