சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகில் திடீர் தீ விபத்து கடலில் குதித்த மீனவர்கள்

Added : செப் 24, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்:நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததில், நாகை மீனவர்கள் ஏழு பேர் கடலில் குதித்து உயிர் தப்பினர்.நாகை, நம்பியார் நகர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து, நேற்று அதிகாலை லோகநாதன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஏழு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.நாகைக்கு நேர் கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, படகில் இருந்த, 'எக்கோ
 படகில் திடீர் தீ விபத்து கடலில் குதித்த மீனவர்கள்

நாகப்பட்டினம்:நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததில், நாகை மீனவர்கள் ஏழு பேர் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

நாகை, நம்பியார் நகர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து, நேற்று அதிகாலை லோகநாதன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஏழு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.நாகைக்கு நேர் கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, படகில் இருந்த, 'எக்கோ சவுண்டர்' கருவியில் பொருத்தப்பட்டு இருந்த பேட்டரி ஒயரில் தீப்பிடித்து, பெட்ரோல் டேங்கில் பரவியது. கரும் புகையுடன் தீ மளமளவென்று படகு முழுதும் பரவியதால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள், விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர். எரிந்து கொண்டிருந்த படகின் தீயையும் அணைத்தனர். இதில் படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் தீயில் நாசமாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X