சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுதாகருக்கு தலிபான் தொடர்பு எப்படி? உளவு அமைப்பு விசாரணை !

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல இருக்கும் மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா பூரண வைஷாலிக்கு, தலிபான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.ஆப்கானிஸ்தானிலிருந்து ௨௧ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ௨,௯௮௮ கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தியது தெரிந்தது.இது தொடர்பாக, சென்னை கொளப்பாக்கம்,

சென்னை:சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல இருக்கும் மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா பூரண வைஷாலிக்கு, தலிபான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானிலிருந்து ௨௧ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ௨,௯௮௮ கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தியது தெரிந்தது.இது தொடர்பாக, சென்னை கொளப்பாக்கம், வ.உ.சி.நகரில் வசிக்கும், மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி ஆகியோரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன், தலிபான் பயங்கரவாதிகள் நான்கு பேர் என மொத்தம், எட்டு பேர் கைதாகி உள்ளனர். சுதாகர் 2017 வரை, சென்னை மற்றும் விஜயவாடாவில், 'லாஜிஸ்டிக்' எனும் சரக்கு போக்குவரத்து தொழில் நிறுவனங்களில் மேலாளராக பணிபுரிந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கப்பலில் சரக்குகளை வரவழைத்து, குறித்த காலத்தில் 'டெலிவரி' எடுப்பதில் அனுபவம் மிக்கவர்.இதன் அடிப்படையில் தான், மாமியார் மற்றும் மனைவி பெயர்களை பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும், 'ஆஷி டிரேடிங் கம்பெனி' என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார்.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளார். அதை சரி செய்ய, 'ஆஷி சோலார் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார். தொழில் பங்குதாரராக சுரேந்தர் என்பவரை இணைத்துள்ளார். இவரும், கொளப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிக்கிறார்.சுதாகரும், வைஷாலியும் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வைஷாலி இல்லத்தரசியாக தான் இருந்துள்ளார்.

சுதாகரிடம், ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனம் மட்டுமே உள்ளது. ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்ந்துள்ளனர். 10 வயது மகள், 6 வயது மகனை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர். சாது போல இருக்கும் சுதாகர் மற்றும் வைஷாலிக்கு, தலிபான் பயங்கவராதிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, மத்திய உளவு அமைப்பான, 'ரா' மற்றும் ஐ.பி., தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'சுதாகர், வைஷாலியின் பின்னணி, இவர்களுடன் தொடர்பில் இருந்தோர், தொழில் ரீதியாக பழகிய நபர்கள், குடும்ப உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்து விசாரித்து வருகிறோம். சுதாகர் பின்னணியில் பயங்கரவாதிகள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்கிறோம்' என்றனர்.

சுதாகர், வைஷாலி குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கூறியதாவது:எங்கள் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். மாதம்தோறும் குறித்த தேதியில் வாடகை தந்து விடுவர். அவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. அடையாறில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக சுதாகர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

சுரேந்தர் தன் மொபைல் போன், 'வாட்ஸ் ஆப்'பில், 'டிஸ்பிளே' படமாக, 'ஆஷி சோலார் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்தின் படத்தை வைத்துஉள்ளார். அதில், தொழில் பார்ட்னர் சுரேந்தர் பெயருடன், இவரது மொபைல் போன் எண்ணும் இடம் பெற்றுள்ளது. இதனால், சுரேந்தருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரிடமும் மத்திய உளவு போலீசார் போலீசார் விசாரித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X