பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவின் பையனுார் நிலத்துக்கான இழப்பீடு நிர்ணய உத்தரவு ரத்து

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான, பையனுார் நிலத்துக்கான இழப்பீடு நிர்ணய உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.சென்னையை அடுத்த பையனுாரில், சசிகலாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக 8,438 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்தது. இதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத்

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான, பையனுார் நிலத்துக்கான இழப்பீடு நிர்ணய உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னையை அடுத்த பையனுாரில், சசிகலாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக 8,438 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்தது. இதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் 2010ல் விசாரணை நடத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை பெற, நிலம் தொடர்பான ஆவணங்களை எடுத்து வரும்படி, சசிகலாவுக்கு அரசு அதிகாரிகள் தகவல் அனுப்பினர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'ஆட்சேபனைக்கு கலெக்டர் தரப்பில் எந்த பதிலும் இல்லை; எனவே, விசாரணையே செல்லாது' என்றார்.

நிலம் கையகப்படுத்தும்நடவடிக்கைகள் சட்டப்படியே துவங்கப்பட்டு, சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்தும், வழக்கு நிலுவையில் இருந்ததால், மனுதாரர் வசம் உள்ள நிலத்தை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நிலத்துக்கான இழப்பீடு குறித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார். மனுதாரருக்கு, சட்டப்படி நோட்டீஸ் வழங்கிய பின், புதிதாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X