பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி நிறுவன ஆக்கிரமிப்பு? 'சர்வே' செய்ய உத்தரவு!

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலங்களை, 'சர்வே' செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை,ஆவடி அருகில் உள்ள கோணம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் மனு:முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரி, நிகர்நிலை பல்கலைக்கான

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலங்களை, 'சர்வே' செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,ஆவடி அருகில் உள்ள கோணம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் மனு:முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரி, நிகர்நிலை பல்கலைக்கான துணை மின் நிலையம், மாணவருக்கான விடுதி ஆகியவை, எங்கள் கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

இந்த கல்வி நிறுவனம் அருகில் உள்ள ஆவடி உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை; விளையாட்டு மைதானம், நுாலக வசதிகள் இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும். அவற்றை, ஆவடி உயர் நிலைப் பள்ளி மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வின் உத்தரவு: சம்பந்தப்பட்ட அனைவருக்கும், மாவட்ட வருவாய் அதிகாரி 'நோட்டீஸ்' பிறப்பித்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலங்களை சர்வே செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X