பழைய லைசென்சை ஸ்மார்ட் கார்டு ஆக்க வசதி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய லைசென்சை 'ஸ்மார்ட் கார்டு' ஆக்க வசதி!

Added : செப் 24, 2021
Share
சென்னை:'ஓட்டுனர்களின் பழைய லைசென்சை, ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்' என, தமிழக போக்குவரத்து கமிஷனர் அறிவித்துஉள்ளார்.தமிழகத்தில் 2019 ஜனவரிக்கு பின், ஓட்டுனர் உரிமம் வாங்குவோர் மற்றும் வாகனங்கள் வாங்குவோருக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவிலான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு முன், காகித வடிவில் தான் உரிமங்கள் வழங்கப்பட்டன. காகித வடிவில் இருந்து கார்டு வடிவிற்கு,

சென்னை:'ஓட்டுனர்களின் பழைய லைசென்சை, ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்' என, தமிழக போக்குவரத்து கமிஷனர் அறிவித்துஉள்ளார்.
தமிழகத்தில் 2019 ஜனவரிக்கு பின், ஓட்டுனர் உரிமம் வாங்குவோர் மற்றும் வாகனங்கள் வாங்குவோருக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவிலான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு முன், காகித வடிவில் தான் உரிமங்கள் வழங்கப்பட்டன. காகித வடிவில் இருந்து கார்டு வடிவிற்கு, ஆர்.சி., புக், மற்றும் லைசென்சை மாற்ற விரும்பினால், முகவரி மாற்றம் அல்லது காணாமல் போனதற்கான தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, இந்த காரணங்கள் இல்லாமலேயே, பழைய லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புக்கை ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு, வாகன மென்பொருளில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பழைய உரிமங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கு, ஸ்மார்ட் கார்டுக்கு 200 ரூபாய்; சேவை கட்டணம் 200 ரூபாய் என 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X