இந்தியாவை 'கழற்றி' விட அமெரிக்கா முடிவு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
வாஷிங்டன் :ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ள, 'ஆகுஸ்' அமைப்பில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்க்க, அமெரிக்கா மறுத்துள்ளது.இந்தோ - பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஆஸி., பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை இணைந்து, 'ஆகுஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் கீழ் அமெரிக்கா முதன் முறையாக ஆஸி.,க்கு 12 அணு நீர்மூழ்கி கப்பல்களை
 இந்தியாவை 'கழற்றி' விட அமெரிக்கா முடிவு


வாஷிங்டன் :ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ள, 'ஆகுஸ்' அமைப்பில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்க்க, அமெரிக்கா மறுத்துள்ளது.

இந்தோ - பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஆஸி., பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை இணைந்து, 'ஆகுஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் கீழ் அமெரிக்கா முதன் முறையாக ஆஸி.,க்கு 12 அணு நீர்மூழ்கி கப்பல்களை வழங்க உள்ளது. இக்கப்பல்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன.


latest tamil news


ஏற்கனவே இதே கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, 'குவாட்' என்ற அமைப்பின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன. இந்நிலையில் குவாட் மாநாட்டில் பங்கேற்க, இந்தியா, ஜப்பான், ஆஸி., பிரதமர்கள் அமெரிக்கா வந்துள்ளனர். அதனால் 'ஆகுஸ் அமைப்பில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் சேர்த்துக் கொள்ளப் படுமா?' என, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பசக்கியிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.அதற்கு ஜென் பசக்கி கூறியதாவது:ஆகுஸ் என்பதில் அமெரிக்கா, ஆஸி., பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆங்கிலப் பெயர்கள் அடங்கியுள்ளன. இதில் ஜப்பானைச் சேர்த்தால் 'ஜாகுஸ்' என்றும், இந்தியாவை இணைத்தால் 'ஜய்ஆகுஸ்' எனவும் மாறி விடும். அதனால் இணைப்பு திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவிடம் இருந்து அணு நீர்மூழ்கி கப்பல் வாங்குவதால், பிரான்சிடம் நீர்மூழ்கி கப்பலுக்கு அளித்த ஆர்டரை, ஆஸி., ரத்து செய்துள்ளது. இதனால் கடுப்பான பிரான்ஸ், முதுகில் குத்தி விட்டதாக ஆஸி.,யை கடுமையாக விமர்சித்துஉள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இடையே பேச்சு நடந்தது. அப்போது, பொதுப் பிரச்னைகளில் திறந்த மனதுடன் விவாதித்து முடிவெடுப்பது என தீர்மானித்து, இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
24-செப்-202121:48:31 IST Report Abuse
தஞ்சை மன்னர் அதாவது குவாட் எடுக்கும் முடிவு குவஸ் கட்டுப்படுத்தாது ஆனால் நாங்க பங்காளிங்க இது எப்படி இருக்குன்னு ஏற்கனவே இருக்கும் குவாட் முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் குவஸ் விட்டு களைத்து விடுவார்கள்
Rate this:
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
24-செப்-202116:33:08 IST Report Abuse
Ranjith Rajan இன்னும் சேர்க்கவே இல்லை.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-செப்-202116:19:31 IST Report Abuse
jayvee பேரு வைக்கிறது பிரச்சனை இல்லை.. இது ஒரு ALL ENGLISH கூட்டணி.. அதாவது அமெரிக்க பாஷையில் சொல்லப்போனால், ரேசிஸ்ட் கூட்டணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X