கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 24, 2021
Share
Advertisement
மதுரை:திருநெல்வேலி வழக்கறிஞர் ராமசுப்பு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காக திருச்செந்துார், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், துாத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல், செம்மண் சில நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறையின் தடையில்லாச் சான்று பெறவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு

மதுரை:திருநெல்வேலி வழக்கறிஞர் ராமசுப்பு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காக திருச்செந்துார், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், துாத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல், செம்மண் சில நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறையின் தடையில்லாச் சான்று பெறவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு: மனுதாரர் புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. புகாரில் உண்மை இல்லை என தெரிவித்தது.

நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலர், கனிமவளத்துறை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,8 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X