பொது செய்தி

தமிழ்நாடு

அதிருப்தியில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள்

Added : செப் 24, 2021
Share
Advertisement
மதுரை:சி.பி.எஸ்., (புதிய ஓய்வூதிய திட்டம்) சந்தா பிடித்தத்தை ரத்து செய்யும் அரசு உத்தரவால் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.மாநிலத்தில் 12 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சந்தா பிடித்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1300-3000 சம்பளம், ரூ.300ல்

மதுரை:சி.பி.எஸ்., (புதிய ஓய்வூதிய திட்டம்) சந்தா பிடித்தத்தை ரத்து செய்யும் அரசு உத்தரவால் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மாநிலத்தில் 12 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சந்தா பிடித்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1300-3000 சம்பளம், ரூ.300ல் சிறப்புகாலமுறை சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சந்தா பிடித்தம் செய்வதை நிறுத்தலாம் என அரசு தெளிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி சந்தா பிடித்தத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.மதுரையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:வருவாய் கிராம உதவியாளர்களை இதர சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் ஊழியர்களுடன் ஒப்பீடு செய்த அரசு உத்தரவுக்கு இது முரணானது.

எனவே புதிய ஓய்வூதிய திட்ட சந்தா பிடித்தத்தை ரத்து செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். தவறினால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், மாரியப்பன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X