கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேவாங்குகளை பாதுகாக்க வழக்கு கலெக்டர்கள் பதில் தர உத்தரவு

Added : செப் 24, 2021
Share
Advertisement
மதுரை:தேவாங்குளை பாதுகாக்க தாக்கலான வழக்கில் திண்டுக்கல் உட்பட 3 மாவட்ட கலெக்டர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை அதலை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: தேவாங்கு அருகிவரும் பாலுாட்டி விலங்கினம் என சர்வதேச இயற்கைவள பாதுகாப்பு ஒன்றியம் அறிவித்துள்ளது. இயற்கையை மறு உற்பத்தி செய்வதில் தேவாங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மரங்கள்,

மதுரை:தேவாங்குளை பாதுகாக்க தாக்கலான வழக்கில் திண்டுக்கல் உட்பட 3 மாவட்ட கலெக்டர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை அதலை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: தேவாங்கு அருகிவரும் பாலுாட்டி விலங்கினம் என சர்வதேச இயற்கைவள பாதுகாப்பு ஒன்றியம் அறிவித்துள்ளது. இயற்கையை மறு உற்பத்தி செய்வதில் தேவாங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மரங்கள், வனத்தை அழிப்பதால் தேவாங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார், கரூர் கடவூர் வனப்பகுதி மற்றும் தமிழகத்தில் இதர பகுதிகளில் தேவாங்குகளை உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாக்க வாழ்விடங்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. வனத்துறை, 'வனப்பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அய்யலுார், கடவூரில் வனத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின் தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,' என பதில் மனு தாக்கல் செய்தது.

நீதிபதிகள் திண்டுக்கல், கரூர், திருச்சி கலெக்டர்கள் நவ.,9 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X